தாய்ப்பால் தருவது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு ஆரோக்கியமான வழக்கமாகும். ஆனால் மாறிவரும் நாகரிக உலகில் தாய்ப்பால் தருவதால் தங்கள் அழகு குறைந்துவிடும் என்று பல தாய்மார்கள் புட்டிப் பாலுக்கு மாறி விடுகின்றனர். தாய்ப்பால் மகத்து வத்தை அறிந்திருந்தும் தாய்ப்பால் கொடுத் தால் தனது அழகு பாதிக் கும் என்று எண்ணுகின்றனர். குழந்தை, தாய்ப்பால் அருந்து வதால் அது குழந்தைக்கு மட்டும் நல்லதல்ல. தாய்ப்பால் தருவதால் புற்று நோய் மற்றும் பலவீனம் அல்லது வலுவற்ற எலும்பு போன்ற நோய்களிலிருந்து தாயும் பாதுகாக்கப்படுகிறார். தாய்ப்பால் தருவதன் மூலம் சில பெண்கள் உடனடியாக மீண்டும் கருத்தரிக்காமல் பாது காக்கப்படுகிறார்கள். பாட்டிலில் பால்குடிக்கும் பொழுது குழந்தை சூப்பி அதாவது உறிஞ்சிக் குடிக்கவேண்டும். தாயிடமிருந்து குழந்தை சரியாகப் பாலினை சீப்பிக் குடிக்கவில்லை எனில் தாய்ப்பால் சுரப்பது குறைந்து விடும்.
குழந்தை பிறந்த முதல் இரண்டு நாட்கள் தாயிடம் சுரக்கும் கொலஸ்ட்ரோம் எனப்படும் மஞ்சள்நிற சீம்பால் குழந்தைக்கு மிகமிக அவசியமாகும்.
தாய்ப்பால் மகத்துவம்
Leave a Comment