திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் முன்னிலையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு நினைவுக் கல்வெட்டினை திறந்து வைத்தார்.
உடன்: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர்
அ. செம்பியன்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘வைக்கம் வெற்றியின் நூற்றாண்டு’ நூலினை வெளியிட பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு பெற்றுக் கொண்டார். உடன்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் அ. செம்பியன்.