சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறு சீரமைப்பு

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, மே 23- உலகத் தரத்தில் எழும்பூர் ரயில் நிலையம் மறு சீர மைப்பு செய்யப்படவுள்ள நிலை யில், காந்தி இர்வின் சாலையை ஒட்டியுள்ள ரயில்வே குடியிருப்பு கட்டடங்கள் முழுமையாக இடிக்கப்பட்டுள்ளன. மற்ற இடங் களில் இப்பணி தீவிரப்படுத்தப்பட் டுள்ளது.

நூற்றாண்டு கடந்த சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை பல் வேறு நவீன வசதிகளுடன் உலகத் தரத்துக்கு மேம்படுத்த தெற்குரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த 50 ஆண்டுகளில் ரயில்கள் இயக்கம், பயணிகள் வருகை உள்ளிட்டவற்றைக் கருத் தில் கொண்டு, மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.

இதற்காக, அய்தரா பாத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத் துக்கு ரூ.734.91 கோடியில் கடந்த ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதையடுத்து, எழும்பூர் நிலை யத்தை அந்த நிறுவனம் வரைபடம் எடுத்து, அளவீடு செய்தது. தொடர்ந்து, காந்தி இர்வின் சாலை அருகேயுள்ள ரயில்வே குடியிருப்புகள், மறுபுறத்தில் பூந்த மல்லி சாலையை ஒட்டியுள்ள ரயில்வே குடியிருப்புகளை இடிக் கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

எழும்பூர் ரயில் நிலையத்தின் காந்தி இர்வின் சாலை அருகே ரயில்வே ஊழியர்கள், அதிகாரி களுக்கான குடியிருப்புகள், தனி வீடுகள் என 45 வீடுகள் இருந்தன. இவற்றை இடித்து, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன. பூந்தமல்லி சாலையை ஒட்டியுள்ள ரயில்வே குடியிருப் பில்120-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இப்பணி முடிந்த பிறகு, கட்டுமானப் பணிகள் தொடங்கும். இதுதவிர, ரயில் ஓட்டுநர் அறை, பயணச்சீட்டு பரிசோதகர் அறை தவிர, மற்ற அலுவலக கட்டடங்களும் இடிக்கப்படும். எழும்பூர் ரயில் நிலையத்தில் தற்போது உள்ள பார்சல் அலுவலகம் அருகே ரயில்வே அலுவலகம் அமைய உள் ளது.

ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி கட்டடம் இடிக்கப்படாது. மறுசீரமைப்பு பணிகளை 3 ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *