காஞ்சிபுரம், அக். 4- காஞ்சி புரம் அறிவு வளர்ச்சி மன்றம் செப்டம்பர் திங்களை திராவிடர் திருவிழாவாகக் கொண்டாடியது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாளையொட்டி, மூட நம்பிக்கை ஒழிப்பு விழிப்புணர்வுப் பட்டிமன் றங்களை அறிவு வளர்ச்சி மன் றத்தின் நிறுவனர் நாத்திகம் நாகராசன் ஒருங்கிணைத்து நடத்தினார்.
நான்கு பட்டிமன்றங்கள்!
17.9.2025 அன்று தந்தை பெரியார் பிறந்த நாளில், மாலை 6.00 மணியளவில், காஞ்சிபுரம் தந்தை பெரியார் சிலை அருகில், ‘மூடநம்பிக்கை மிகுந்திருப்பது தமிழ் நாட்டைத்தவிர்த்த இந் தியாவிலா? தமிழ்நாட்டிலா?’ என்ற தலைப்பிலும், 22.9.2025 அன்று மாலை 6.00 மணியளவில், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில், மூடநம்பிக்கை மிகுந்திருப்பது நகரங்களிலா? கிராமங்களிலா? என்ற தலைப் பிலும், 25.9.2025 அன்று மாலை 6.00 மணியளவில், சின்ன காஞ்சிபுரம், பச்சையப்பன் கிளை இடைநிலைப் பள்ளி எதிரில், மூடநம்பிக்கை மிகுந் திருப்பது ஆண்களிடத்திலா? பெண்களிடத்திலா? என்ற தலைப்பிலும் 30.9.2025 அன்று மாலை 6.00 மணியளவில், சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் அருகில், மூடநம்பிக்கை மிகுந்திருப்பது படித்தவர்களிடமா? படிக்காத வர்களிடமா? என்ற தலைப்பிலும் நான்கு நாட்கள் பட்டிமன்றங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மாவட்ட திராவிடக் கழகத் தலை வர் அ.வெ. முரளி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
பகுத்தறிவுப் பாடல்கள்!
அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் அ.வெ. சிறீதர் அனைவரையும் வரவேற்றார். பகுத்தறிவுப் பாடகர் காஞ்சி உலக ஒளி பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினார்.
நாத்திகம் நாகராசன் நடுவர்!
அறிவு வளர்ச்சி மன்றத்தின் நிறுவனர் நாத்திகம் நாகராசன் பட்டிமன்றத்திற்கும் நடுவராக இருந்து பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துரைத்தார்.
பேச்சாளர்கள்!
முனைவர் காஞ்சி பா. கதிரவன், அ.வெ.முரளி, ந.சிதம்பரநாதன், காஞ்சி அமுதன், மரு.மு.ஆறுமுகம், ரவி பாரதி, ஆ.திருமலை, பல்லவர் மேடு சேகர், அ. அருண்குமார், சாரதா தேவி, கு. அருளானந்தம், குறள்அமிழ்தன், ஆகியோர் பட்டிமன்றப் பேச்சாளர்களாக இருந்து நகைச்சுவை ததும்ப பல்வேறு செய்திகளை எடுத்து வைத்து வாதிட்டனர்.
மூடநம்பிக்கை
நோய்களை ஒழிக்க…
நான்கு பட்டிமன்றத்திலும் மக்களிடம் மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளைத் தோலுரித்துக் காட்டியும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துச் சொல்லி, ‘மூடநம்பிக்கை நோய் களை ஒழிக்க பகுத்தறிவுச் சிந்த னைகளே மாமருந்து’ என்று பிரச் சாரம் செய்யப்பட்டது.
தந்தை பெரியாருடைய 95 ஆண்டுகாலத் தொண்டு, அறிஞர் அண்ணா அவர்களின் 60 ஆண்டுகால உழைப்பு, முத் தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பகுத்தறிவுத்தொண்டு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நெடிய தொண்டு, முதலமைச்சர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பகுத்தறிவுச் செயல்பாடுகள், துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸநாதனம் குறித்து சொன்ன செய்திகள் முதலிய கருத்துகள் பட்டிமன்றங்களில் பேசப்பட்டு மக்களிடையே நல்ல தெளிவை உண்டாக்கின.