கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் வரி செலுத்துவதற்காக புதிய இணையதளம்

Viduthalai
2 Min Read

சென்னை, மே 23- ஊரக வளர்ச்சி மற் றும் ஊராட்சி இயக்கக ஆணையர் டாக்டர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்ற றிக்கையில் கூறப்பட்டு உள்ளதா வது:- 

கிராம ஊராட்சிகளில் பொது மக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங் களை செலுத்துவதற்கு ஏதுவாக https://vptax.tnrd.tn.gov.in  என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தற் போது பொதுவெளியில் 22-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. 

இதன்மூலம் வீட்டு உரிமையா ளர்கள், பயனர்கள் செலுத்தவேண் டிய வீட்டு வரி தொகை, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவை இந்த இணையதளத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ளீடு செய்யப் பட்டுள்ளன. இதன்படி, சுமார் 1.38 கோடி தரவுகள் உள்ளீடு செய்யப் பட்டுள்ளன. கிராம ஊராட்சி களுக்கு பொதுமக்கள், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிம கட்ட ணம், இதர வரியில்லா வருவாய் இனங்களை இந்த இணையதளத் தின் மூலமாக இணையவழி கட் டணம், ரொக்க அட்டைகள், யூ.பி. அய். கட்டணம் மற்றும் பி.ஓ.எஸ். (பாய்ண்ட் ஆப் சேல்) எந்திரங் களின் மூலமாக செலுத்தலாம்.  

கிராம ஊராட்சி அமைப்பு களுக்கு வழங்கப்பட்டுள்ள அதி கார பகிர்ந்தளிப்புக்கு உட்பட்ட கட்டடங்களுக்கு அனுமதி முழு மையான இணையவழி மட்டுமே தரப்படவேண்டும். இதற்கென பிரத்யேகமாக இணையதளம்https://onlineppa.tn.gov.in/என்ற முகவரியில் உருவாக்கப்பட்டுள் ளது. ஊரக பகுதிகளில் கட்டட அனுமதி வழங்கும் பொறுப்பு கிராம ஊராட்சியின் செயல் அலு வலருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சியால் விண்ணப்பதார ருக்கு கேட்பு தொகையினை விண் ணப்பதாரர் இணைய வழியி லேயே செலுத்தும் வகையில் மென் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகள் எந்தவொரு கட்டணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது. இணையவழியில் ஆன்லைன் பி.பி.ஏ. தளத்தின் மூலம் மட்டுமே பெறவேண்டும். அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் செயலர்கள், அனைத்து ஊரக வளர்ச்சித்துறை கள அலுவலர்களும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல் பட தக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளவேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *