ஜெயங்கொண்டம், அக்.3- ஜெயங்கொண்டம் பெரி யார் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் (29/9/25) – (30/9/25) ஆகிய இரண்டு நாட்களும் முதல்வர் அவர்களின் வழிகாட்டலுடன் ஆசிரியர்களுடன் இணைந்து கல்விச் சுற்றுலா சென்றனர். சுற்றுலா பயணத்தின் போது மாணவர்கள் சென்னை நகரில் உள்ள பல முக்கியமான இடங்களைப் பார்வையிட்டனர்.
பெரியார் நினைவிடம் சாதி ஒழிப்பு, சமதர்மம், பெண்கள் உரிமை குறித்த புரட்சிகள் மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் இடமாக அமைந்தது. விண்வெளி தொடர்பான “Planet Show”அறிவியல் விளக்கம், உயிரியல், அறிவியல் விளையாட்டு சாதனங்கள் மாணவர்கள் அறிவியல் உணர்வு பெற சிறந்த இடத்தை பார்வையிட்டனர்.
அதன்பிறகு, மாணவர்கள் அண்ணா நூலகம் சென்று அங்கு நூலகத்தின் பெருமை, புத்தக சேமிப்புகள் மற்றும் வாசிப்பு கலாச்சாரம் குறித்து அறிந்துகொண்டனர். அதன்பிறகு, மாணவர்கள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப் பொலிவுடன் திகழும் வள்ளுவர் கோட்டம் சென்று திருவள்ளுவர் பற்றிய வரலாற்று தகவல்களை அறிந்தனர். மேலும், அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்கள் சென்று தலைவர்களின் தியாகங்களையும், பண்பாட்டையும் நினைவு கூர்ந்தனர்.
இரண்டாம் நாள் விஜி.பி சுறா பூங்கா சென்ற மாணவர்கள் பல்வேறு ராட்டினங்களிலும், நீர் விளையாட்டு
களிலும் விளையாடி மகிழ்ந்தனர்.
சுற்றுலா முடிவில் மாணவர்கள் மாமல்லபுரம் கடற்கரையில் சிறிது நேரம் மகிழ்ச்சியுடன் விளையாடி கல்விப் பயணத்தை நிறைவு செய்தனர்.
இந்த கல்விச் சுற்றுலா மாணவர்களுக்கு வரலாறு, கலை மற்றும் பண்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தியதோடு புதிய அறிவையும், அனுபவத்தையும் வழங்கிய சிறந்த நிகழ்வாக அமைந்தது. இச் சுற்றுலாவிற்கு மிகவும் உதவிய பள்ளி யின் தாளாளர் மற்றும் அனைத்து கழக தோழர் களுக்கும், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக இந்த இரண்டு நாள் கல்விச் சுற்றுலாவை சிறப்பாக திட்டமிட்டு, தங்குமிடம் மற்றும் அறுசுவை உணவும் பாதுகாப்பாகவும், பயனுள்ளவையாகவும் அமைத்தமைக்கு, இதயப்பூர்வமான நன்றி களை தெரிவித்துக் கொண்டனர்.