‘விடுதலை’ செய்திப்பிரிவு பணித் தோழர் ச.பாஸ்கரின் தந்தை மு.சம்மந்தன் (வயது 83) அவர்கள் உடல் நலன் குன்றி சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று (3.10.2025) காலை 9.30 மணியளவில் கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
மறைவு தகவல் அறிந்ததும் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், ப.சீதாராமன் ஆகியோர் மறைவுற்ற மு.சம்மந்தன் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி தோழர் ச.பாஸ்கருக்கு ஆறுதல் தெரிவித்தனர். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாஸ்கருக்கு ஆறுதல் தெரிவித்தனர். விடுதலை பணித் தோழர்கள் அனைவரும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். இன்று மாலை திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள எச்சூர் கிராமத்தில் இறுதி நிகழ்வு நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 9444184762