தருமபுரி, மே 24- தருமபுரி மாவட்டத்தில் கோயில் திருவிழாவிற்காக கொண்டுவரப்பட்ட பட்டாசு கள் வெடித்துச் சிறுவன் உட்பட 2 பேர் பலி யாயினர்.
தருமபுரி மாவட்டம் சிந்தில்பாடி அருகே சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றதாம். இதில் நேற்று (23.5.2023) இரவு மினி லாரியில் சாமி ஊர்வலம் நடைபெற்றதாம்.
அப்போது வாணவேடிக்கையின் போது பட்டாசு நெருப்பு மினி லாரிக்குள் விழுந்தது. இதையடுத்து மினி லாரியில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறின. இதில் லாரிக்கு அருகில் இருந்த 7 வயது சிறுவன் ஆகாஷ் உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த ஓட்டுநர் ராகவேந்திரனும் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.