2.10.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆர்.எஸ்.எஸ்., பாஜக, இந்திய ஜனநாயகத்தை சிதைக்கிறது; சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது, பீகாரில் நடைபெற்ற காங்கிரஸ் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம்.
* தெலங்கானா அரசு பிறப்பித்த பிற்படுத்தப்பட் டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அரசுக்கு ஆதரவாக காங்கிரசில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு தலைவர்கள் மனு செய்திட முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* துரோகிகள் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.-சில் இணைந்தனர்”: ‘ஆர்.எஸ்.எஸ். பிரிட்டிஷ்காரர்களுக்கு உதவியது’: சுதந்திரத்தின் போது சங்கத் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறியதை காங்கிரஸ் நிராகரிப்பு.
* ம.பி. அரசின் இடஒதுக்கீடு மசோதா: உச்சநீதிமன்றத்தில், 50% உச்ச வரம்பை மீறும் ஓபிசி இடஒதுக்கீடு உயர்வை நியாயப்படுத்த 1980 இல் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மகாஜன் ஆணையத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி மனு.
தி டெலிகிராப்:
* உ.பி. முதலிடம்: 2023 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான 4.48 லட்சத்திற்கும் அதிகமான குற்றங்களை இந்தியா பதிவு செய்துள்ளது, உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் முதலிடத்திலும் டில்லி முன்னணி நகரங்களிலும், சைபர் குற்றங்கள் மற்றும் எஸ்.டி. மீதான குற்றங்களும் கூர்மையாக அதிகரித்துள்ளன என தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை (NCRB) தரவுகள் தெரிவிக்கின்றன.
– குடந்தை கருணா