4.10.2025 அன்று மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றார். மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை, பார்வையாளர் பகுதி, பெரியார் சமூகக் காப்பணி பயிற்சி போன்றவற்றை அமைச்சர் தா.மோ. அன்பரசன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி மற்றும் பொறுப்பாளர்கள் பார்வையிட்டனர்.