சோழிங்கநல்லூர் மாவட்ட கழக மாதந்திரக் கூட்டம் 8.9.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் வே.பாண்டு தலைமையில் மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அக்டோபர் 4 ஆம் தேதி மறைமலை நகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவிற்காக நன்கொடை வசூலிக்க வாங்கிச் சென்ற ரசீது புத்தகத்தையும் வசூலித்த பணத்தையும் தோழர்கள் தலைவரிடம் ஒப்படைத்தார்கள். மாநாட்டிற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ஆர் டி வீரபத்திரன் காப்பாளர், விஜய் உத்தமன் ராஜ் மாவட்ட செயலாளர், முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் மூதறிஞர் குழு தலைவர், சண்முகசுந்தரம் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர், தமிழினியன் மாவட்ட துணை தலைவர், பி.சி.ஜெயராமன் பொதுக்குழு உறுப்பினர், கலைச்செல்வன் பொதுக்குழு உறுப்பினர், மணிகண்டன் தொழிலாளர் அணி, தேவி சக்திவேல் மகளிர் அணி, ஸ்வேதா குமார் மகளிர் அணி, மடிப்பாக்கம் அரசு பகுத்தறிவாளர் கழகம், பி.குமார் மாணவர் கழகம், எம் சந்தோஷ் இளைஞர் அணி, ஆர் சந்தோஷ் இளைஞர் அணி, திவாகர் மேடவாக்கம் திக, சுப்புரத்தினம் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் மற்றும் மாவட்ட தலைவர் வே.பாண்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.