மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (2.10.2025) சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான பணியில் உயிர்நீத்த வட மாநில தொழிலாளர்கள் 9 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தார். இந்நிகழ்வில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் மரு கலாநிதி வீராசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், அய்ட்ரீம் மூர்த்தி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. அர்விந்த மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.