தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (2.10.2025) முகாம் அலுவலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக நாகப்பட்டினம். திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், கடலூர், திருச்சி, அரியலூர் ஆகிய டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நெல் கொள்முதல், சேமிப்பு, இருப்பு, நகர்வு மற்றும் அரவை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா. கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.