கோவையில் உலக புத்தொழில் மாநாடு வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடக்கிறது

கோவை, அக்.2-    கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 9, 10ம் தேதிகளில், தமிழக அரசின் ‘டி.என்., ஸ்டார்ட் அப்’ சார்பில், ‘உலக புத்தொழில் மாநாடு-2025’ நடக்கிறது.

உலகம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவன வல்லுநர்கள், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 50க்கும் மேற்பட்ட தமிழ்நாடு பிராண்டுகள், 150க்கும் மேற்பட்ட பன்னாட்டு, தேசிய உரையாளர்கள், 750க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், 75க்கும் மேற்பட்ட தொழில்வளர் மய்யங்கள், 10க்கும் மேற்பட்ட யூனிகார்ன், சூனிகார்ன் நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த ஏராளமான வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக் கொள் ளலாம் என, தொழில் அமைப்புகளுக்கு, அரசு சார்பில் வழிகாட்டல் வழங்கப்பட்டு வருகின் றன. ‘மாஸ்டர் கிளாஸ்’ ஏற்ெகனவே உள்ள ஸ்டார்ட் அப் நிறுவ னங்கள், தங்களை விரிவு படுத்திக் கொள்ளவும், புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க விருப்பமுள்ளவர்கள், புரோட்டோடைப் மாதிரி களை வைத்துள்ளவர்கள் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும், ‘மாஸ்டர் கிளாஸ்’ நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், புதிய ஸ்டார்ட் அப் யுக்திகளை தொழிலாக மாற்றுவது, தேசிய, பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவுபடுத்து வது, சந்தை வாய்ப்பை அதிகரிப்பது, முதலீடு களை ஈர்ப்பது என அனைத்துக்கும் வகை செய்யப்பட்டுள்ளது. இரு நாட்களில், 11 அமர்வுகள் ‘மாஸ்டர் கிளாஸ்’ நிகழ்ச்சியில் திட்டமிடப்பட்டுள்ளன.

வெஞ்சர் கிரியேஷன் மெஷின், ஏ.அய். தொழில்நுட்பத்துடனான நிர்வாகம், வாட்ஸ்அப்பை தொழில்வளர்ச்சிக்கு பயன்படுத்துதல், யோசனைகளிலிருந்து தொழிலாக மாற்றுதல், கூகுள் கருவிகளைப் பயன்படுத்துதல், ஆன்லைன் வர்த்தக வளர்ச்சி, தரவுகளைப் பயன்படுத்துதல் என, 11 விதமான தலைப்புகளில் உரையும், விவாதமும் நடக்கிறது. முன்னணி நிறுவனங்கள் கூகுள், வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, வெஞ்சர் ஸ்டூடியோ போரம், மாநில அரசின் திட்டக்குழு, நாட்வித்தவுட்ரிஸ்க், கூகுள் பார் ஸ்டார்ட் அப்ஸ், போன் பே, கம்மா, ஹார்வர்டு பல்கலை., ஜோஹோ, டிசைன் திங்கிங் என பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களில் இருந்து பங்கேற்று உரை நிகழ்த்தி, வழிகாட்டுகின்றனர்.

எப்படி பங்கேற்பது? தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் மட்டுமே இந்த அமர்வு களில் பங்கேற்க முடியும். அனுமதி (பாஸ்) கட் டாயம்.

முன்பதிவு செய்ய வேண்டும். இரு நாட்களுக்கான உணவு, தொழில் சார்ந்த ‘கிட்’ வழங்க ப்படும். இதுதொடர்பான தகவல்கள், ‘டிஎன்ஜி எஸ்எஸ்’ செயலியிலும், tngss.startuptn.in
மாநாட்டு இணையதளத்திலும் இடம்பெற்றுள்ளன. அதில் பார்த்து, பதிவு செய்து கொள்ளலாம்.

பங்கேற்க விரும்பும் தொழில்முனைவோர் அதிகமாக இருப்பின், துறை சார்ந்த முன் னுரிமை அடிப்படையில், இடம் ஒதுக்கப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *