சென்னை, அக்.2- சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், 42.45 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப் பட்டுள்ள தொல்காப்பிய பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (1.10.2025) ஆய்வு செய்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக் கட்டளையின் சார்பில், 42.45 கோடி ரூபாய் செலவில் தொல்காப்பிய பூங்கா மேம்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மாடம், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி உள் ளிட்ட பல் வேறு வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
சீரமைப்பு
கடந்த, 2008ல், 58 ஏக்கர் பரப்பில், அன்றைய முதலமைச்சர் கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டு, 2011 ஜனவரி 21இல் அவரால் திறந்து வைக்கப்பட்டது. கடந்த காலத்தில் முறையான பராமரிப்பின்றி இருந்த தொல்காப்பிய பூங்கா, இப்போது சீரமைக் கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி யால் தொல்காப்பிய பூங்கா பகுதி 1 மற்றும் பகுதி 2 இணைக்கப்பட்டு, சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடை மேம்பாலம் அமைக்கப்பட் டுள்ளது.