நைஜீரியா, அக்.2– நைஜீரியாவின் கோகி மாநிலத்தில் அமைந் திருக்கும் நைஜர் நதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர்.
நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) கோகி மாநிலத்தின் இபாஜி பகுதியிலிருந்து எடோ மாநிலத்தை நோக்கி இந்தப் பயணிகள் படகு சென்றுகொண்டிருந் தபோது நடுவழியில் விபத்து நேரிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வியாபாரிகள் எனக் கூறப்படுகிறது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் மழைக்காலங்களில் படகு விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. அதிகப் பயணிகளை ஏற்றிச் செல்வது, படகுகளை முறையாகப் பராமரிக்காமல் பயன்படுத்துவது ஆகியவை இத்தகைய விபத்துகள் தொடர்வதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. கடந்த மாதம், நைஜர் மாநிலத்தில் அதிகப் பயணிகளை ஏற்றிச் சென்றார்கள் என்பது படகு கவிழ்ந்ததில் 31 பேர் பலியான சம்பவம் குறிப்பிடத்தக்கது.