வைக்கம் வீரர் பெரியார் கொள்கையாகவே தெரிகிறார் என S. இராமநாதன் அவர்களின் பதிவை கவிஞர், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி பூங்குன்றன் முக்கிய சாராம்சங்களை எடுத்துச் சொன்ன சிலவற்றை Periyar Vision OTT இல் காணலாம். 26/11/1931 இல் கோவை ஜில்லா மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது புரட்சியாளர் லெனின், நாகம்மையார் படங்களை திரு.வி.க திறந்து வைத்தார். 1928 இல் வ.உ.சி. அவர்கள் பெரியாரை பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. பெரியார் ஒரு இன்டர்நேஷனல் மூவ்மெண்ட் என்பதை அய்ரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த பெரியாரை பற்றி நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது. 94 ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் மனிதர் அல்ல கொள்கையன் மறு உருவம் என்று முன்னேறிய நாடுகள் ஏற்றுக்கொண்டன. ரஷ்ய படையெடுப்பை வரவேற்கிறேன் என்று சொன்ன பெரியாரை கேள்வி கேட்டபோது பிறப்பு, ஜாதி பேதம் இல்லாத ரஷ்ய நாடு அவை இருக்கின்ற நாட்டின் மீது படை எடுத்து சமதர்மத்தை நிலை நாட்டுவதில் என்ன தவறு என்று கேட்டார். 1930 இல் நடைபெற்ற ஈரோட்டு மாநாட்டில் இடுப்புக்கு வேட்டியில்லாமல் இருப்பவன் ஒருபுறம்: மூன்று வேட்டி கட்டிக்கொண்டு உல்லாசமாக திரிபவன் மறுபுறம், உழைத்து பசியோடு இருப்பவன் ஒருபுறம்: ஐந்து வேளை சாப்பிட்டு வயிற்றை தடவிக் கொண்டிருப்பவன் ஒருபுறம் என்ற நிலைகள் மாறி சமதர்ம சுயமரியாதை இயக்கம் உலக மக்கள் எல்லோருக்கும் இருந்து தீரும். வர்ணங்கள் ஜாதி மதங்கள் ஒழிய வேண்டும். ஏழை- பணக்காரன், வேலைக்காரன்- ஜமீன்தார், தொழிலாளி- முதலாளி, கூலி- எஜமான், குரு- சிஷ்யன் இந்த வேறுபாடெல்லாம் கர்மபலன் என்று கூறும் மடமையை ஒழிக்க வேண்டும். ஜெர்மன் பல்கலைக்கழகத்திலும் வாஷிங்டனிலும் நடைபெற்ற பன்னாட்டு உலக மாநாடு மதமற்ற உலகம் வேண்டுமென கூறுகிறது. இவற்றையெல்லாம் முன்பே கூறிய பெரியாரின் மண்டை சுரப்பி உலகம் தொழும். பெரியார் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கும் தலைவர். ஆகவேதான் அவருடைய கருத்துகள் கொள்கைகள் 21 மொழிகளில் பயணிக்கிறது. தந்தை பெரியாரின் விசாலமான தொலைநோக்கு பார்வைகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இணையதளம் காணொலி காட்சியை அவசியம் பாருங்கள்
M காந்திமதிநாதன்
சிறீரங்கம், திருச்சி.
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com