நேற்றுவரை எங்களின் கொள்கை எதிரி பா.ஜ.க. – அது ஒரு பாசிசம் என்று சொன்னவர்தானே விஜய்! அப்படி என்றால் பா.ஜ.க.வும், அதன் கூட்டணிகளும் இதுதான் சந்தர்ப்பம் என்று விஜய் மீதும், அவர் கட்சியின் மீதும் கண்டனக் கணைகளை ஏவிடவில்லை, இப்பொழுது என்ன நடக்கிறது? அவர்கள் எல்லாம் நடிகர் பக்கம் நிற்கும் மர்மம் என்ன? விழுந்து விழுந்து ஆதரிப்பதன் ரகசியம் என்ன?
பிஜேபி சார்பில் விசாரணைக் குழுவாம்! ஒன்றிய நிதி அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும், நிதின் கட்கரியும், மேனாள் ஆளுநரும், தமிழ்நாட்டின் முன்னாள் – இந்நாள் பிஜேபி தலைவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு ‘‘வலம்புரி சங்கே, கண்ணின் மணியே, கற்கண்டுச் சாறே’’ என்று உருகி உருகி நடிகரின் கன்னத்தை வருடவில்லை என்பதுதான் ஒரே ஒரு குறை; மற்றபடி முட்டுக் கொடுக்கிறார்களே ஏன், ஏன்? பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது, திராவிடர் கழகத் தலைவர் முதன் முதலாக ஒரு கருத்தை வெளியிட்டாரே!
ஆம் “குத்தகைக்கு விடப்பட்டது விஜய் கட்சி” என்றாரே – இப்பொழுது விளங்கி விட்டதா? இல்லையா?