சாலைகிராமம், அக். 1- சிவகங்கை மாவட்டம் சாலைகிராமத்தில்16.9.2025 அன்று மாலை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, அறிவாசான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா எழுச்சியோடு நடைபெற்றது. காரைக்குடி மாநகரக்கழக துணைத்தலைவர் ஆ.பழனிவேல்ராசன் வரவேற்புரையாற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், கழக காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி, இளையான்குடி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆறு.செல்வராசன், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வே.தமிழ்மாறன் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கா.வெங்கட்ராமன், இளையான்குடி விசிக ஒன்றிய செயலாளர் ஜேம்ஸ் வளவன் வழக்குரைஞர் சேவியர் ஆகியோர் உரையாற்றிய பின் கழக பேச்சாளர் பெரியார்செல்வன் அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அருந்தொண்டாலும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஒப்பற்ற பேருழைப்பாலும் திராவிட இனமக்கள் பெற்றிருக்கும் உயர்வினை எடுத்துக்காட்டி எழுச்சியுரையாற்றினார்.
ஒன்றிய திமுக அயலக அணி துணைஅமைப்பாளர் சேதுசெகதீசன் அன்னையார் சே.பழனியம்மாள் படத்தினை திறந்து வைத்து தமிழ்நாடு மேனாள் அமைச்சர், மானாமதுரை சட்டமன்ற திமுக உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார் தனது உரையில், தந்தை பெரியார் உழைப்பு தான் இன்று ஒவ்வொரு துறைகளிலும் உயர்ந்து ஒளிர்கிறார்கள். தந்தை பெரியாரின் கொள்கை வழி நின்று திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவளிக்க வேண்டுமென கேட்டு சிறப்புரையாற்றினார்.இறுதியில் ஒன்றிய கழக தலைவர் பவனிவட்டன் நன்றி கூறினார். நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மா.சுந்தர்ராசன், காரைக்குடி மாநகர செயலாளர் அ.பிரவீன், தி.தொ.க. மாவட்டத்தலைவர் சி. சூரியமூர்த்தி, தி.க.பாலு, செ.குணசேகரன்,தினகரன் முரளி ஆகியோர் பங்கேற்று சிறப்பித் தார்கள்.