டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கரூர் துயரச் சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய 3 பேர் கைது.. எச்சரித்தபடியே காவல்துறையினர் அதிரடிச் செயல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* கேரள சட்டபேரவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவதற்கான மாற்று வழி என கண்டனம்.
* தெலங்கானா பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு நீதிமன்ற வழக்கில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர காங்கிரஸ் வேண்டுகோள்.
தி இந்து:
* பொது நிகழ்வுகளை நடத்துவதற்கான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு உருவாக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
* வாக்குத் திருட்டு மீதான நம்பிக்கை காரணமாகவே, பீகாரில் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 160 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அமித் ஷா தெரிவித்துள்ளார் என காங்கிரஸ் விமர்சனம்.
தி டெலிகிராப்:
* பிரதமர், முதலமைச்சர் பதவி நீக்க மசோதா. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இருந்து விலக காங்கிரஸ் முடிவு: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தென் அமெரிக்கச் சுற்றுப் பயணத்தில் ராகுல் காந்தி. கொலம்பியாவை அடைந்தார்; மாணவர்கள், அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடத் தொடங்கினார்
– குடந்தை கருணா