துறையூர், செப். 30- தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 17.9.2025 அன்று காலை 9 மணியளவில் துறையூர் பேருந்து நிலையம் முன் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இனிப்பு வழங்கப்பட்டது
விழாவிற்கு மாவட்ட கழக தலைவர் ச.மணி வண்ணன் தலைமை தாங்கி நடத்தினார். மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி. மாநில ப. க. அமைப்பாளர் அ.சண்முகம் முன்னிலை வகித்தனர்.
துறையூர் விநாயகர் தெருவில் காலை 9.30 மணிக்கும். புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு திருச்சி சாலையில் காலை 10.மணிக்கும்.கண்ணணூர் சமத்துவ புரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு காலை 11 மணிக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
விழாவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் செ. செந்தில் குமார். மாவட்ட கழக செயலாளர் ஜெ. தினேஷ் பாபு. மாவட்ட மாணவர் கழக தலைவர் ரெ. தன்ராஜ். மாவட்ட மாணவர் கழக செயலாளர் சே. விஷ்ணுவர்தன். மாவட்ட இளைஞரணி துணை தலைவர் த.ரஞ்சித் குமார். மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சு. சரண்ராஜ். உப்பிலியபுரம் ஒன்றிய கழக செயலாளர் மாராடி எம் ஏ. ரமேஷ். மாவட்ட ப. க. துணை செயலாளர் எஸ். என். புதூர். கருணாகரன். மாவட்ட ப. க. செயலாளர் பி.பிரபு. மாவட்ட ப.க. துணை தலைவர் த.கலைப் பிரியன். மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் காவியா. துறையூர் ஒன்றிய கழக தலைவர் இர. வரதராஜன். துறையூர் நகர கழக தலைவர் க. இராஜா. துறையூர் நகர மாணவர் கழக தலைவர் ச. சர்ஜுன். துறையூர் நகர இளைஞரணி தலைவர் சிக்கத்தம்பூர் பொ.முரளி.பொதுக்குழு உறுப்பினர் கோர்ட் பெ. பாலகிருஷ்ணன். கோர்ட் எம். ஆர். சந்திர போஸ். சிங்களாந்தபுரம் கிளைக் கழக தலைவர் ஞான சேகரன். மாவட்ட மகளிரணி மாலினி சண்முகம், ஆட்டோ அழகு மலை. பெரியார் பிஞ்சுகள் கா.செ.இனியன் செல்வா. கா.செ.மலரிதழ்.மா.ச.டார்வின் பெரியார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பெரியார் தொண்டு. கொள்கை பற்றி மாவட்ட தலைவர் எடுத்து கூறினார்.