சென்னை, மே 24 – மாவட்ட நீதிபதிகள் 4 பேர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நேற்று (23.5.2023) பதவியேற்று கொண்டனர்.
மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்த மார்ச் மாதம் கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதையடுத்து ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, 4 பேரும் இன்று(மே 23) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.