விருதுநகர், செப்.30- விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்த நாளை யொட்டி கல்லூரி மாண வர்களுக்கான பேச்சுப் போட்டி 27.09.2025 அன்று காலை 9 மணியளவில், விருதுநகர் சி.பி.அய். அலுவலக அரங்கில் நடை பெற்றது.
மாவட்ட ப.க. செயலாளர் பூ.பத்மநாதன் தலைமையில், மாவட்ட கழக தலைவர் கா.நல்லதம்பி, செய லாளர் விடுதலை தி.ஆதவன் ஆகியோர் முன்னிலையில், அருப் புக்கோட்டை ஒன்றிய ப.க. அமைப்பாளர் முனைவர் வே.வேங்கடசுப்பையன், விருதுநகர் குறள் நெறிக் கழகப் பொறுப்பாளர் ச.நடராசன், தோழர் மா.உதயகுமார் ஆகி யோர் நடுவர்களாக அமர்ந்து போட்டியினை வழிநடத்தினர்.
திருச்சுழி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவி கு.கனகலட்சுமி முதல் பரிசும், சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் பா.செந்தில் நாராயணன் இரண்டாம் பரிசும், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரி மாணவர் அ.மதன் பாண்டி மூன்றாம் பரிசும், விருதுநகர் வி.வி.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி மாணவி கு.நித்திலா ஆறுதல் பரிசும் பெற்றனர்.
மாவட்ட மகளிரணிச் செயலாளர் பொன்மேனி ராஜயோகம், சி.பி.அய். மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.பாலமுருகன் மற்றும் போட்டி நடுவர்கள் வாழ்த்துரை வழங்கினர். விருதுநகர் நகர் மன்றத் தலைவர் எஸ்.ஆர்.எஸ்.ஆர்.மாதவன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ் மற்றும் உண்மை இதழ்கள் வழங்கிப் பாராட்டிச் சிறப்புரையாற்றினார்.
போட்டியில் பங் கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் உண்மை இதழ்கள் வழங்கப் பட்டது. போட்டிக்கான பரிசுத் தொகை மற்றும் செலவினங்களை மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ந.ஆனந்தம், சிவகாசி மாநகர் கழக அமைப்பாளர் பெ.கண்ணன், அருப்புக் கோட்டை தோழர்கள் மா.உதயகுமார், க.எழிலன், நா.நாராயணன் ஆகியோர் ஏற்றனர்.
மாவட்ட கழக இளை ஞரணித் தலைவர் க.திருவள்ளுவர், செயலா ளர் அ.பெரியார் செல்வம், மாணவர் கழக அமைப்பாளர் மு.புகழேந்தி மற்றும் சி.பி.அய். தோழர்கள் மாணவர்கள் உடன் வந்த பெற்றோர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மாவட்ட கழக துணைத் தலைவர் பா.இரா சேந்திரன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்வில் பங்கேற்ற தோழர்களுக்கு சி.பி.அய். நகரச் செயலாளர் கே.எஸ்.காதர் மைதீன் மதிய உணவு வழங்கினார்.