பெரியகுளம், செப்.30- பெரியகுளம் நகரின் மய்யப்பகுதியில் 21.9.2025.மாலை 4.மணியளவில் சிறீராமானுஜர் மண்ட பத்தில் பகுத்தறிவாளர் கழகம், நம்மால் முடியும் சேவை நல சங்கம், வழக்குரைஞர் சங்கம் – பெரியகுளம் இணைந்து தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாள், அறி ஞர் அண்ணா 117ஆம்.ஆண்டு பிறந்தநாள் மற்றும் அனைத்து பள்ளி மாணவ-மாணவியருக்கு பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா 16ஆம் ஆண்டாக கொண்டாடப் பட்டது. தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் அ.மோகன் தலைமை வகித்து நடத்தினார். மாவட்ட பொருளாளர் சே.கருப்பணன் வரவேற்பு உரையாற்றினார்.
முப்பெரும் விழாவில். பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் வி.மோகன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் உலகம் முழுவதும் தந்தை பெரியார் கருத்துகள் கொண்டு செல்லப்பட்டதை விளக்கமாகவும், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் சிறப்புரையாற்றி போட்டி யில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப் பித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பகுத்தறிவு சிந்தனையோடு பங்குபெற்ற தலைவர்கள்: பெரியகுளம் வளர்ச்சி பேரவை தலைவர் வழக் குரைஞர் .ஜி. கே .மணி கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஓய்வு) ஆ. ஜெகதீசன், யுனைடெட் இந்தியா மேலாளர் எஸ்.பால்ராஜ், பொறியாளர் ஒ.சந்திரமோகன், நகர ப.க. பொறுப்பாளர்கள் கே.எம்.எம்.கண்ணன், இப்ராஹிம் பாட்ஷா, வழக்குரைஞர் காமராஜ், ஜெயராஜ், கோபாலன், முருகன், பொருளாளர் ஆண்டவர், கழக அமைப்பாளர் ஆதி தமிழன், துரைப்பாண்டி, புருஷோத்தமன், கனக சீதா, முரளி, மீனாட்சி சுந்தரம் அன்பரசன், கிருஷ்ணமூர்த்தி, நூர் முகமது அலி, முஸ்தபா. மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், தாய்மார்கள், பெண்கள் சிறப்பான முறையில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகளை பிரியா, சிவகாமி சுந்தரி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிறைவாக நம்மால் முடியும் சமூக சேவை நல சங்க செயலாளர் அ.மாரிமுத்து நன்றி உரையாற்றினார்.