திருச்சி, நவ.10 – திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பெரியார் மன்றம் மற்றும் திராவிட மாணவர் கழகத்தின் சார்பாக 08.11.2023 அன்று மாலை 2.30 மணியளவில் “திராவிட தமிழினம் எதிர்க்க வேண் டிய முதல் பண்டிகை – தீபாவளி” என்ற தலைப்பில் மூடநம்பிக்கை ஒழிப்பு சிறப்புக் கருத்தரங்கம் கல்லூரி அரங்கத்தில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாண வர் கழகத் தலைவர் இல.அனிதா வரவேற்புரையாற்றினார்.
பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா. செந்தா மரை அவர்கள் தமது தலைமை யுரையில்:–
மனிதர்களிடையே ஜாதி, மத பேதமைகளையும், பாகுபாடுகளை யும், பொருளாதார சீர்கேட்டி னையும் விளைவிக்கும் விழாக் களை பெரிதும் எதிர்த்தவர்தான் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்.
அத்தகைய மாபெரும் தலைவர் தமிழினத்திற்காக அடை யாளம் காட்டிய ஒரே விழா, ஒப்பற்ற விழா பொங்கல் விழா என்றும், அதனையே தமிழர் திரு நாளாக அறிவித்தார்கள். இன்றைய மாண வர்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட பள்ளி, கல்லூரிகள் தோறும் திராவிட மாணவர் கழகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற நம் நிறுவனத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் அறிவிப்பிற்கிணங்க நமது கல்லூரியில் 2018இல் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் தலை மையில் திராவிட மாணவர் கழகம் உருவாக்கப்பட்டது.
தொடர்ந்து பகுத்தறிவு வளர்க் கும் விதமாக பல்வேறு மூடநம் பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை நமது திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள் செய்து வருவ தும் புராணக் கட்டுக்கதைகளால் உருவான தீபாவளி குறித்து சரி யான நேரத்தில் இன்றைய நாள் இக்கருத்தரங்கை ஏற்பாடு செய் திருப்பதும் மிகவும் பாராட்டிற் குரியது என்று தெரிவித்தார்.
பொய் புரட்டுகள்தான் தீபாவளி
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந் தினர் திராவிடர் கழகத்தின் சொற் பொழிவாளர் இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில், அனைத்துத் தரப்பு மக் களும் தீபாவளி குறித்த ஆபாசக் கட்டுக்கதைகளை அறியாமல், ஆர்வமுடன் கொண்டாட காத்தி ருக்கும் இந்நேரத்தில் “திராவிட தமிழினம் எதிர்க்க வேண்டிய முதல் பண்டிகை தீபாவளி” என்ற தலைப்பில் சிறப்பான கருத்தரங் கத்தை ஏற்பாடு செய்த திராவிட மாணவர் கழகத்திற்கு முதலில் தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது, படிக்கக்கூடாது, சொத் துரிமை இல்லை, குடும்பக் கட்டுப் பாட்டு முறைகள் கூடாது என்ற பழைமை வாதங்கள் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர் களால் தகர்த்தெறியப்பட்டு இன்று அவைகள் சரி என்று நம் சமுதாயம் பகுத்தறிவு சிந்தனை களை பெற்றிருக்கின்றது.
விண்வெளிக்கு சந்திரயான் ஒன்று, இரண்டு, மூன்று என விண் கலத்தை அனுப்பக்கூடிய இக் காலக்கட்டத்திலும் மூடநம்பிக்கை குறித்த விழிப்புணர்வு தேவைப்படு கிறது.
ஆரியர்கள் அசுரன் என்று சொல்லக் கூடியவர்கள் நம்மு டைய இனமான திராவிட இனம் தான். அவர்களின் அர்த்தமற்ற பொய் புரட்டுக்கள் தான் தீபாவளி என்றும் திராவிட தமிழினத்தை போற்றும் தமிழர்கள் எதிர்க்க வேண்டிய முதல் விழா தீபாவளி என்றும் உரையாற்றினார்.
அறிவியல் பார்வையில்…
நாட்டில் கரோனாவிற்கு மணி யடிப்பதும், விளக்கேற்றுவதுமான செய்திகள் மூடநம்பிக்கையின் உச்சக் கட்டம் என்றும், இதுபோன்ற மூட நம்பிக்கைகளின் முதல் ஆணிவேர் தான் தீபாவளி என்றும் எடுத் துரைத்தார்.
இதுபோன்ற சூழலை பெரியார் கல்வி நிறுவனங்களில் பயிலக்கூடிய மாணவர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், பொது மக்களிடத்திலும் பகுத்தறிவு சிந்தனைகளை கொண்டு செல்ல வேண்டும். விழாக்கள் கொண்டாடு வதன் நோக்கம், அதன் உண்மை வர லாறு, அறிவியல் பார்வை போன்ற வற்றை சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஜாதி, மத பேதம் கடந்து சமத்துவத்தை எடுத்துரைக்கும் பொங்கல் விழாவை மட்டும்தான் தந்தை பெரியார் அவர்கள் தமிழன் விழாவாக அறிவித்தார்கள்.
எந்தவித பாகுபாடும் இல்லா மல் சமத்துவதுடன் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக, ஒரே விதமாக கொண்டாடக்கூடிய விழா பொங்கல் விழா என்றும் அதனையே திராவிடத் திருநாளாக மாணவச் செல்வங்கள் கொண் டாட வேண்டும் என்றும் உரை யாற்றினார்.
மதத்தின் பெயரால் திராவிட இனம் எவ்வாறு அடிமைப்படுத்தப் பட்டுள்ளது என்பதனையும் சமஸ் கிருத வேதங்களின் புரட்டுக்களை பாடல்களின் மூலமும், தமது நகைச் சுவை கலந்த கருத்துகளின் மூலமும் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் முனைவர் அ.மு.இஸ் மாயில் மற்றும் பெரியார் மன்றச் செயலர் அ.சமீம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். நிறைவாக கல்லூரியின் திராவிட மாணவர் கழக துணைத் தலைவர் ரா.நந்த குமார் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.