சென்னை, செப். 30- முன்னணி அய்.டி. நிறுவனங்களில் ஒன்றான அய்பிஎம்-இல் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் கொச்சியில் உள்ள அய்பிஎம் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி அய்.டி. நிறுவனமாக அய்பிஎம் செயல்பட்டு வருகிறது. இந் நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் டெவலப்பர் (Software Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதனுடன் தொடர்புடைய படிப்பை முடித்திருக்க வேண்டும். கல்லூரியில் கடைசி ஆண்டு படிப்போரும் விண்ணப்பம் செய்யலாம்.
அதேபோல் புரோகிராமிங் லேங்குவேஜை எடுத்து கொண்டால் Go, Java, Python அல்லது ஸ்கிரிப்ட்டிங் லேங்குவேஜ் தெரிந்திருக்க வேண்டும். ஃப்ரண்ட்எண்ட்டூல்ஸ்களான ரியாக்ட், ரெடக்ஸ், ஆங்குலர் ஜேஎஸ், ஜாவா ஸ்கிரிப்ட், எச்டிஎம்எல், சிஎஸ்எஸ் தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் பைத்தான், ஜாவா அல்லது Go பயன்படுத்தி பேங்க்எண்ட் டெவலப்மென்ட்டில் ஆர்வம் இருக்க வேண்டும். டெஸ்ட்டிங் டூல்ஸ்களான Jest, Cypress, Codecept உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். Ansible, Python பயன்படுத்தி டெஸ்ட் ஆட்டோமேஷனின் அடிப்படை அறிவு இருக்க வேண்டும். அதேபோல் APIs-யில் பில்டி்ங, டெஸ்ட்டிங் மற்றும் ஆட்டோமேஷன் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். GitHub அல்லது பிற கோட் கண்ட்ரோல் சிஸ்டமில் அனுபவம் இருக்க வேண்டும். Cloud Platform (IBM Cloud, AWS, Azuer, GCP), DevOps டூல்ஸ் மற்றும் பிராக்டீஸ், Kubernetes Docker அல்லது Openshift, Linux Systems, ஆட்டோமேஷன் ஃபிரேம்வொர்க்ஸ், டேட்டா சயின்ஸ் கான்செப்ட்ஸ் அல்லது குளவுட் ஆர்க்கிடெக்ச்சர் பற்றி தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்ட்டாகும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாத ஊதியம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள அய்பிஎம் நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.