முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2ஆம் தேதி ராமநாதபுரம் செல்கிறார் கரூர் துயரத்தால் ரத்தான பயண தேதி மாற்றம்

சென்னை,செப்.30 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 2ஆம் தேதி ராமநாதபுரம் செல்கிறார். நேற்று (செப்டம்பர் 29) ராமநாதபுரம் செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் 2, 3 ஆம் தேதிகளில் ராமநாதபுரத்தில் கள ஆய்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டங்கள் நடத்தியும், நலத் திட்டங்கள் வழங்கியும் வருகிறார். அந்தவகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நேற்று செப்டம்பர் 29 ஆம் தேதி   வருகை தந்து, செப்டம்பர் 30 ஆம் தேதி இன்று மாவட்ட வளர்ச்சிக்காக அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தவும், நலத் திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 2ஆம் தேதி ராமநாதபுரம் செல்கிறார். நேற்று (செப்டம்பர் 29) ராமநாதபுரம் செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் 2, 3 ஆம் தேதிகளில் ராமநாதபுரத்தில் கள ஆய்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ராமநாதபுரம் அருகே புல்லங்குடி பகுதியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்புக்கு மொரிசியஸ் அமைச்சர் புகழாரம்

சென்னை, செப்.30- தமிழ்நாடு மருத்துவ கட்ட மைப்பு குறித்து மொரீசியஸ் அமைச்சர் ஹம்பிராஜன் நரசிங்கென் புகழாரம் தெரிவித்தார். அவர் உயர் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தலைநகரம்

மொரீசியஸ் நாட்டின் இளநிலை வெளியுறவு, வர்த் தகத்துறை அமைச்சர் ஹம்பிராஜன் நரசிங்கென் நேற்று (29.9.2025) தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவர், அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சந்தித்து பேசினார். அப்போது அவர், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம், உயர் மருத்துவ சிகிச்சைகள் குறித்த பயிற்சி, மருந்து கொள்முதல், இந்திய மருத்துவத்தில் தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகள், மருத்துவ சுற்றுலா போன்ற மருத்துவ தேவைகள், வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

புகழாரம்

அப்போது தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப் புகளுக்கு புகழாரம் சூட்டி பாராட்டு தெரிவித்தார். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆணையர் லால்வேனா, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் விஜயலட்சுமி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் சீதாலட்சுமி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் சித்ரா, சென்னை மொரீசியசின் கவுரவ தூதர் மலையப்பன் நாகலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு படங்களுக்கு
100 விழுக்காடு வரி – டிரம்ப்

வெளிநாட்டுப் படங்களுக்கு டிரம்ப் 100 விழுக்காடு வரிவிதித்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவிடம் இருந்து திரைப்பட வர்த்தகத்தை மற்ற நாடுகள் திருடுவதாகவும், இந்த நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு காணவே இந்த வரிவிதிப்பை அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஒப்பீட்டளவில் மற்ற நாடுகளின் படங்களை காட்டிலும் இந்திய படங்களே அதிகம் வெளியாவதால், இது இந்திய திரைப்படத் துறையை பாதிக்கும் என கூறப்படுகிறது.

 3 அய்ஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

3 அய்ஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி இணை ஆணையராக கற்பகம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநராக அண்ணாத்துரையும், பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையராக ஜான் லூயிசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *