ராமேஸ்வரம் – இலங்கை தலைமன்னாருக்கு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் எ.வ. வேலு தகவல்

சென்னை, செப்.30- ராமேசுவரம் – இலங்கை தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க ஒன்றிய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டு உள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

மாநிலத்திற்கு வருவாய்

தமிழ்நாடு கடல்சார் வாரியத் தின் 97-ஆவது வாரியக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று (29.9.2025) நடந்தது. கூட்டத்தை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து பேசியதாவது:-

முதலமைச்சரின் தொலைதூரப் பார்வைக்கு ஏற்ப, வருகிற 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.85 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி அடைய கடல்சார் வாரியத்தின் பொருளாதார நடவடிக்கைகளின் மூலம் மாநிலத்திற்கு மிகப்பெரும் வருவாய் கிடைக்க வேண்டும். இதன்மூலம் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வதுடன் கூடுதலாக வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும்.

சிறு துறைமுகங்கள் மூலம் வணிகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி பெற வழிவகை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு முன்னோடி மாநிலம்

முதலமைச்சரின் சீரிய முயற்சியால், தமிழ்நாடு தொழில் முனைவோருக்கான முன்னோடி மாநிலமாக உள்ளது. இதன் அடிப் படையில் தனியார் முதலீட்டு துறைமுகங்கள் அமைப்பதற்கு மிகவும் சாத்தியமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு கடல்சார் வாரியம் 1,069 கிலோ மீட்டர் நீள கடற்கரை பகுதியில் சாத் தியமான இடங்களில் சுற்றுப் புறச் சூழல் மற்றும் மீன்பிடி வாழ்வாதாரங்கள் பாதிக்க ப்படாமல் பல்வேறு சிறு துறை முகங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய வற்றை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது.

ஒன்றிய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடலூர் துறைமுகத்தை மேம்படுத்தி 37 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தான் அதை இயக்குவதற் கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டடுள்ளன. விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலம், பொது மக்களின் பேரா தரவை பெற்றுள்ளது. இதுவரை பல லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு உள்ளனர்.

ராமேசுவரம் – தலைமன்னார்

ராமேசுவரம் – இலங்கை தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க கருத்துருக்கள், ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு, நிதியுதவி கோரப்பட்டுள்ளது. 2024-2025-ஆம் ஆண்டில், தமிழ்நாடு கடல் சார் வாரிய கட்டுப்பாட்டில் உள்ள சிறுதுறைமுகங்களில், 1 கோடியே 20 லட்சம் டன் சரக் குகள் கையாளப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல்சார் வாரியம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு, அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு கடல் சார் வாரிய துணைத்தலைவர் மற்றும் தலைமைசெயல் அலு வலர் டி.என்.வெங்கடேசன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ் போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் சஞ்சோங்கம் ஜடக்சிரு, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா, தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத் துறையின் முதன்மை செயலாளர் வி.அருண்ராய், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், நிதித்துறை இணைச்செயலாளர் ராஜகோ பால்சுங்கரா,கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் என்.சுப்பையன், மாநில துறைமுக அலுவலர் கேப்டன் எம்.அன்பரசன், தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படை உயர் அதிகாரி கமாண்டர் சவராட் மாஹோன், கடலோர காவல்படை டி.அய்.ஜி.முருகன், சுங்கத்துறை கண்காணிப்பாளர் கே.விஜய கிருஷ்ணவேலன், கடல் வாணிபத்துறை அலுவலர் சி.ஆர்.சுப்பராவ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *