குறைதீர் – எண்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மய்ய எண் 149 – ஆக மாற்றப்பட்டுள்ளது.
சேம நல நிதி
தமிழ்நாடு காவலர் சேம நல நிதியில் இருந்து 355 காவலர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் குழந்தைகளின் கல்வி உதவித் தொகைக்கு என மொத்தம் ரூ.81 லட்சத்திற்கான உதவித் தொகையை காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்.
தேர்தல்
தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட 7 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் சென்னையில் நேற்று (9.11.2023) நடந்தது. இதில் 2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அரசிதழில்…
தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான உயர்த் தப்பட்ட வரி உயர்வு அமலுக்கு வந்தது. இது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்பை…
திருமணமான பின் கணவர் வீட்டில் வசிப்பதாலும், பெற்றோரின் குடும்ப அட்டை யிலிருந்து பெயர் நீக்கப்படுவதாலும் ஒரு பெண் பிறந்த வீட்டுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டார் எனக் கூற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுப் படுத்தியுள்ளது.
குளிர்கால…
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் 3ஆம் வாரம் தொடங்கி நடைபெறும். ஆனால், தற்போது 5 மாநில தேர்தல் நடப்பதால், அடுத்த மாதம் டிசம்பர் 4ஆம் தேதி குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு.
பயிர்க்கடன்
கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பு நிதியாண்டில் 8.59 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.7,081 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட் டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அமல்
சென்னை மாநகராட்சியில் 1000 சதுர அடிக்கு மேல் வீடு உள்பட அனைத்து கட்டடம் கட்டுவதற்கான அனுமதிக் கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டது. இன்று (10.11.2023) முதல் அமலுக்கு வருகிறது.