டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ராகுல் காந்திக்கு பாஜக குழு உறுப்பினர் விடுத்த ‘கொலை மிரட்டல்’ தொடர்பாக காங்கிரஸ் அமித்ஷா வுக்கு கடிதம். நியூஸ் 18 கேரளா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாஜக சார்பாக ஆஜரான மகாதேவ், லடாக் வன்முறை குறித்த விவாதத்தின் போது, “ராகுல் காந்தி மார்பில் சுடப்படுவார்” என்று கூறினார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கரூர் கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் சங்கிலி: மோசமான ஒருங்கிணைப்பு, கூட்டத்தின் தவறான மேலாண்மை மற்றும் தாமதமான திட்டமிடல். த.வெ.க.வின் எந்த மூத்த தலை வரும் காயமடைந்தவர்களையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களையோ சந்திக்கவில்லை.
தி இந்து:
*பீகாரில் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக இடங்களை விட்டுக்கொடுக்கும் ஆர்ஜேடி, காங்கிரஸ்: சிபிஅய் (எம்எல்) 19 இடங்களை விட எட்டு அதிகமாகப் பெறலாம். சிபிஅய் எண்ணிக்கை ஆறு ஆகவும், சிபிஅய்(எம்) நான்கு ஆகவும் இருக்கும் என தகவல்.
தி டெலிகிராப்:
* லடாக்கின் மக்கள், கலாச்சாரம் மற்றும் மரபுகள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றால் தாக்கப்படுவதாக ராகுல் குற்றச்சாட்டு. லடாக்கை ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்க வேண்டும் என்றும் பேச்சு.
– குடந்தை கருணா