திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா – பரபரப்பான வழக்காடு மன்றம்!

3 Min Read

திருமருகல், செப். 29- நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், சந்தைப்பேட்டையில் 27.9.2025 அன்று மாலை 6.00 மணிக்கு தொடங்கி தமிழர் இனம், மொழி, மானம், அழித்திட முயல்வோர் குற்றவாளிகளே என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் பரபரப்பான வாதங்களோடு எழுச்சியோடு நடைபெற்றது.

திருமருகல் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் இராச.முருகையன் தலைமையில் நடைபெற்ற வழக்காடு மன்றத்தில் நாகை மாவட்ட கழகத்  தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாவட்ட து.தலைவர் பொன்.செல்வராசு, நாகை நகர தலைவர் தெ.செந்தில்குமார், மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.குட்டி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தொடக்கத்தில் திருமருகல் ஒன்றிய கழகச் செயலாளர் சு.ராஜ்மோகன் வரவேற் புரையாற்றினார்.

பெரியார் பிஞ்சுகள் தமிழினி, யாழினி, சுபலட்சுதா, தேவதர்சினி ஆகியோர் கடவுள் மறுப்பு கூறினர்.

திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் மு.இளமாறன் தொடக்க உரையாற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக .பொன்முடி  இணைப்புரை வழங்கினார்.

வழக்காடு மன்றத்தில் தமிழர் இனம், மொழி, மானம் அழித்திட முயல்வோர் குற்றவாளிகளே என்று வழக்கை தொடுத்த கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் தமிழர் இனம், மொழி, மானம் அழிக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க குற்றவாளியே என்று தனது வாதங்களை ஆதாரப்பூர்வமாக முன்வைத்தார். அதனை மறுத்து பேச வேண்டிய கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் வழக்கை ஏற்பதாகவும் ஆனால் பார்ப்பனர்கள் எப்படி குற்றவாளியோ அதே போல் அதற்கு ஆதரவாக இருப்பவர்களும் குற்றவாளிகளே என்று தனது வாதங்களை ஆதாரப்பூர்வமாக முன்வைத்தார். நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கிய கழகப் பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன்   இரு பக்க வாதங்களையும் கேட்டு இறுதியாக தமிழர் இனம், மொழி, மானம் அழிக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க குற்றவாளியே! என்றும் அதற்கு ஆதரவாக இருப்பவர்கள் மன்னிக்கவே முடியாத குற்றவாளிகளே! என்றும்  தீர்ப்பளித்து நிறைவுரையாற்றினார்.

பரபரப்பான வாதங்கள், குறுக்கு விசாரணை என்று மக்களை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற வழக்காடு மன்றத்தினை காண நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.  திருமருகல் ஒன்றிய துணைத் தலைவர் மு. சின்னதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி செயலாளர் ப.காமராஜ்,  ஒன்றிய துணை செயலாளர் இரா.ரமேஷ், நாகை நகர செயலாளர் கு. சின்னதுரை, வட்ட விவசாய தொழிலாளர் அணி செயலாளர் காமராஜ்,  நாகை நகர செயலாளர் சண்.ரவி,  மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செ.பாக்யராஜ், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.கவிதா,  மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ஜெயப்பிரியா, ஒன்றிய மகளிரணி தலைவர் இரா.ரம்யா, ஒன்றிய மகளிரணி செயலாளர் மு.ஹேமலதா, காரைக்கால் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், காரைக்கால் மாவட்ட இளைஞரணி தலைவர் பெரியார் கணபதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் லூயிஸ், திருவாரூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் பிளாட்டோ, திருவாரூர் ஒன்றிய தலைவர் கவுதமன், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் சரோஜா, நன்னிலம் ஒன்றிய செயலாளர் தன்ராஜ், நன்னிலம் பகுத்தறிவாளர்கள் ஒன்றிய தலைவர் கரிகாலன், பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்த சி.தங்கையன், ச.ஹேமலதா, மருங்கூர் மகாலிங்கம், மகேஷ், கீழ தஞ்சை வேதாச்சலம்,  கு.சிவானந்தம், திராவிட மாணவர் கழக ச.அதியன், ஆ.குருநாதன், க.கஜேந்திரன், சா.அறிவாளன், செ.க.அறிவுச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் வெ.தீபன் சக்கரவர்த்தி நன்றி உரையாற்றினார். எழுச்சியோடு நடைபெற்ற வழக்காடு மன்றம் இரவு 9 மணி அளவில் நிறைவடைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *