ஆவடி மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

11 Min Read

ஆவடி, செப். 29- ஆவடி மாவட்ட கழகம் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்த நாள் விழா இரண்டு கட்டமாக மொத்தம் நடைபெற்ற இடங்கள் 40 பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இடங்கள், 6 கழகக் கொடி ஏற்றிய இடங் கள் 20, பெரியார் படத்திறப்பு நடைபெற்ற இடங்கள், 20 சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்த இடங்கள் 40 கழகப் பேச்சாளர் தேவ.நர்மதா பரப்புரை செய்த இடங்கள் 10.

தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்தநாள் விழா ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் க. இளவரசன் ஒருங்கிணைப்பில் மாவட்ட கழக துணைத் தலைவர் மு.ரகுபதி முன்னிலையில் மாவட்ட கழக துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் (விழாக் குழு தலைவர்) ஏற்பாட்டில் எழுச்சியுடன் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

அயப்பாக்கம்

முதல் நிகழ்வாக 17-09-2025 அன்று காலை 06-30 மணிக்கு அயப்பாக்கம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு அரிகிருட்டிணன் தலைமை யில் மாவட்ட கழகத் தலைவர் வெ.கார் வேந்தன் மாலை அணிவித்தார்.

ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி நகர கழக தலைவர் கோ.முருகன் கழகக் கொடியை ஏற்றி வைக்க மாவட்ட கழக செயலாளர் க. இளவரசன் சமூக நீதி நாள் உறுதிமொழி வாசிக்க கழகத் தோழர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .பின் ஆவடி ராணுவ சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலை நோக்கி மாவட்ட கழகக் தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் எழுச்சிமிகு ஊர்வலம் புறப்பட்டது. தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட கழக காப்பாளர் பா.தென்னரசு ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜானகிராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி வாசித்தனர்.

வேப்பம்பட்டு

பின்னர் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவிற்கு மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தனும், மற்றொரு குழுவிற்கு மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் சு.வெங்க டேசனும் தலைமை வகித்தனர். மாவட்ட கழகத் தலைவர் வெ. கார்வேந்தன் தலைமையில் புறப்பட்ட குழு வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுக்குழு உறுப்பினர் சிவ ரவிச்சந் திரன் தலைமையில் பட்டாளம் பன் னீர்செல்வம் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் கோரா இல்லத்தில் உள்ள பெரியார் சிலைக்கு கோராவின் மகள் தமிழரசி மாலை அணிவித்து மரியதை செலுத்தி அனைவருக்கும் காலை உணவு அளித்தார்.

திருநின்றவூர்

திருநின்றவூர் பகுதியில் உள்ள மறைந்த கழகத் தோழர் ராமதுரை இல்லத்தில் திருநின்றவூர் பகுதி கழகச் செயலாளர் கீதா இராமதுரை தலைமையில் திருநின்றவூர் பகுதி கழக தலைவர் அருண் கழக கொடியை ஏற்றி வைத்து உறுதிமொழி வாசித்தார்.நாசிக் நகரில் மாவட்ட கழக மகளிரணித் தோழர் சித்ரா தலைமையில் இளைஞரணி தோழர் தமிழ்ச்செல்வன் கழகக் கொடியை ஏற்றி உறுதிமொழி வாசித்தார்.

பட்டாபிராம்

மாவட்ட கழக துணைத்தலைவர் ரகுபதி இல்லத்தில் ராணிரகுபதி கழக கொடியை ஏற்றி தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி வாசித்தார்.பட்டாபிராம் பகுதியில் உள்ள உழைப்பாளர் நகரில் பட்டாபிராம் பகுதி கழகத் தலைவர் இரா.வேல்முருகன் இல்லத்தில் மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் கழகக் கொடியை ஏற்றி வைத்ததுடன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு உழைப்பாளர் நகர் பிரதான சாலையில் மரக்கன்றினை நட்டார். அதேபோன்று ஆவடி 18ஆவது வார்டில் தோழர் நாகராஜன் முன்னிலையில் புரட்சி பாரதம் கட்சி பட்டாபிராம் பகுதி தலைவர் சுதாகர் தலைமையில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேப்பூர்

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பட்டாபிராம் நகர காங்கிரஸ் தலைவர் அமீத்பாபு, 1ஆவது வார்டு காங்கிரஸ் தலைவர் எலியாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் சு.வெங்கடேசன் தலைமையில் புறப்பட்ட மற்றொரு குழுவினர் மாங்காடு பேருந்து நிலையம் அருகேயுள்ள தந்தை பெரியார் சிலைக்கும்,மேப்பூரில் உள்ள சிலைக்கும்,குத்தம்பாக்கம் சமத்துவபுரத்தில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியதை செலுத்திய பின் பூவிருந்தவல்லி மார்க்கெட் பகுதியில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதே நாளில் பிறந்த நாள் கண்ட திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலாநிதிக்கு கழக தோழர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.இத்துடன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா முதல்கட்ட நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

ஆவடி மாநகராட்சி

இரண்டாம் கட்டமாக 21-07-2025 ஞாயிற்றுக்கிழமை காலை ,07-00 மணிக்கு ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் ஜெயராமன் இல்லத்தில் கழகக் கொடியை ஆவடி மாநகராட்சி 39ஆவது வார்டு தி.மு.க.மாமன்ற உறுப்பினர் செ.சரளா ஏற்றி வைக்க ஜெயராமன் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

திருமுல்லைவாயல்

திருமுல்லைவாயல் பகுதியில் திருமுல்லைவாயல் பகுதி கழக தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ் தலைமையில் பெரியார் படத்திற்கும் அம்பேத்கர் சிலைக்கும் ஆவடி மாவட்ட உண்மை வாசகர் வட்ட செயலாளர் திராவிடமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புதூர் பேருந்து நிலையம் அருகில் பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன் ஆவடி நகர கழக செயலாளர் இ.தமிழ்மணி தலைமையில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதி மொழி வாசித்த பின் கழக பேச்சாளர் தே.நர்மதா உரையாற்றினார்.

அம்பத்தூர்

அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிறுத்தம் அருகில் தந்தை பெரியார் படத்தை செல்வம் தலைமையில் மாவட்ட மகளிரணி தலைவர் சி.ஜெயந்தி திறந்து வைக்க மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தொண்டறம் உறுதிமொழி வாசிக்க, கழக பேச்சாளர் தே.நர்மதா உரையாற்றினார். அம்பத்தூர் டன்லப் அம்பேத் கர் சிலை அருகில் கழகக் கொடியை அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் அய்.சரவணன் தலைமையில் பகுதி கழக தலைவர் பூ.இராமலிங்கம் ஏற்றி வைத்த பின் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் பகுத்தறிவு அறிவிப்பு பலகையை மகளிரணித் தோழர் தெய்வமணி திறந்து வைத்தார்.

கொரட்டூர்

கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் கொரட்டூர் பகுதி கழகத் தலைவர் வழக்குரைஞர் பன்னீர்செல்வம் கழகக் கொடியை ஏற்றி வைக்க மாணவரணி தோழர் அன்புமணி உறுதிமொழி வாசிக்க தே நர்மதா உரையாற்றிய பின் அனைவருக்கும் காலை உணவு பரிமாறப்பட்டது காலை உணவு முடித்த பின் கொரட்டூர் ரயில் நிலைய சாலையில் உள்ள மாவட்ட கழக செயலாளர் க. இளவரசன் இல்லம் அருகில் தந்தை பெரியார் படத்தை பெரியார் பெருந்தொண்டர் துரை முத்துகிருஷ்ணன் திறந்து வைத்து உறுதிமொழி வாசித்தார்.

பாடி

பாடி சரவணா ஸ்டோர் அருகில் கழகக் கொடியை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி ஏற்றி வைத்தார் .பாடி யாதவா தெருவில் கழகக் கொடியை கோ. பகலவன் ஏற்றினார். பிரிட்டானியா எதிரில் உள்ள அம்பேத்கர் திடலில் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் ஏற்றி வைத்தார்.

மதுரவாயல்

கொரட்டூர் பாசறை அலுவலகத்தில் தி.மு.க தோழர் கு.சங்கர் கழகக் கொடியை ஏற்றினார். மதுரவாயல் மார்க்கெட் பகுதியில் தோழர் குமார் தலைமையில் மதுரவாயல் பகுதி கழகச் செயலாளர் தமிழன் காசி பெரியார் படத்தை திறந்து வைத்து உறுதிமொழி வாசித்தார். மதுரவாயல் ரேசன் கடை பேருந்து நிலையம் அருகில் பிரபாகரன் தலைமையில் செய்யாறு மாவட்ட கழக மேனாள் தலைவர் சேத்பட் நாகராசன் தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து உறுதிமொழி வாசித்தார் .

ஆலப்பாக்கம்

மதுரவாயல் மின்சார வாரிய அலுவலகம் அருகில் கழகக் கொடியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர் ராஜா ஏற்றி வைக்க கழக மாணவர் கழகத் தோழர் அறிவுமதி உறுதிமொழி வாசிக்க கழக பேச்சாளர் தே .நர்மதா உரையாற்றினார். ஆலப்பாக்கம் பிரதான சாலை தனலட்சுமி நகரில் கழகக் கொடியை மாவட்ட கழக துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் தலைமையில் மதுரவாயல் பகுதி கழகத் தலைவர் சு. வேலுசாமி ஏற்றி வைத்தார். மதுரவாயல் பகுதி கழக செயலாளர் தமிழன் காசி ஏற்பாட்டில் அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது.

குமணன்சாவடி

குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் பகுத்தறிவு தலைமையில் கழகக் கொடியை மாவட்ட கழக மகளிர் பாசறை செயலாளர் அன்புச்செல்வி ஏற்றி வைத்து உறுதிமொழி வாசித்தார். சக்தி நகர் தண்ணீர் தொட்டி அருகில் பூவிருந்தவல்லி பகுதி கழகச் செயலாளர் மணிமாறன் தலைமையில் பகுதி கழக தலைவர் பெரியார் மாணாக்கன் தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து உறுதிமொழி வாசித்தார் .

பூவிருந்தவல்லி

பூவிருந்தவல்லி ராஜா நகரில் கழக மாணவர் கழகத் துணைச் செயலாளர் தொண்டறம் தலைமையில் தந்தை பெரியார் படத்தை கழகப் பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி திறந்து வைத்தார். வசந்தபுரி பகுதியில் செம்மொழி நூலகத்தில் தந்தை பெரியார் படத்தை திராவிட இயக்க தமிழர் பேரவை செங்கல் பட்டு மாவட்ட தலைவர் தோழர் சாந்தசீலன் திறந்து வைத்து உறுதிமொழி வாசித்தார் .

பூவிருந்தவல்லி தாங்கல் அம்பேத்கர் நகரில் அனகை ஆறுமுகம் இல்லத்தில் அவரது மகன் தமிழ்ச்செல்வன் கழகக் கொடியை ஏற்றி வைத்தார் . டாக்டர் சரோஜா இல்லம் அருகில் தந்தை பெரியார் படத்தை பசும்பொன் செந்தில் குமாரி திறந்து வைக்க மகளிர் அணி தோழர் கனிமொழி உறுதிமொழி வாசித்தார். பூவிருந்தவல்லி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள முரசொலி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த தந்தை பெரியார் படத்துக்கு தி.மு.க. இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலாநிதி மாலை அணிவித்து உறுதிமொழி வாசித்தார்.

திருவேற்காடு

திருவேற்காடு பேருந்து நிலையம் அருகில் மாவட்ட கழக இளைஞரணி துணைச் செயலாளர் சென்ன கிருட்டிணன் தலைமையில் சின்னதுரை தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து உறுதிமொழி வாசிக்க தே . நர்மதா உரையாற்றினார். திருவேற்காடு பகுதி கழக இளைஞரணி தோழர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் குளிர்பானம் வழங்கி மகிழ்ந்தனர்.

கோவர்தனகிரி

கோவர்தனகிரி பகுதியில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கார்த்திகேயன் இல்லத்தில் கழக கொடியை தோழர் எழிலன் ஏற்றி வைக்க தே.நர்மதா உரையாற்றினார் .ஆவடி நகர கழகத் தலைவர் கோ . முருகன் இல்லத்தில் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மகளிர் அணி தோழர் எல்லம்மாள் இனிப்பு வழங்கினார். கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் இறுதியாக ஆவடி பெரியார் மாளிகையில் புலால் உணவு பரிமாறப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்கள் விபரம் கழகப் பேச்சாளர் தேவ.நர்மதா, பா.தென்னரசு (மாவட்ட கழக காப்பாளர்) வெ. கார் வேந்தன் (மாவட்ட கழக தலைவர்) க. இளவரசன் (மாவட்ட கழக செயலாளர்) மு. ரகுபதி (மாவட்ட கழக துணைத் தலைவர்) பூவை தமிழ்ச்செல்வன் (மாவட்ட கழக துணைச் செயலாளர்) சி.ஜெயந்தி (மாவட்ட கழக மகளிர் அணி தலைவர்) பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, பொதுக்குழு உறுப்பினர்கள் பூவை செல்வி, சிவ ரவிச்சந்திரன் வி. சோபன் பாபு (மாவட்ட கழக இளைஞரணி தலைவர்) சு.வெங்கடேசன் (மாவட்ட கழக இளைஞரணி செயலாளர்) இரா. கலைவேந்தன் (மாவட்ட கழக இளைஞர் அணி துணைத் தலைவர்) சென்ன கிருட்டிணன் (மாவட்ட கழக இளைஞரணி துணைச் செயலாளர்)

சுகந்தி (மாவட்ட கழக மகளிர் பாசறை தலைவர்) அன்புச்செல்வி (மாவட்ட கழக மகளிர் பாசறை செயலாளர்) ஜானகிராமன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) கார்த்திகேயன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) ஜெயராமன் (மாவட்ட கழக பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) தங்க. சரவணன் மதுரவாயல் பகுதி பகுத்தறிவாளர் கழகம் கோ. முருகன் (ஆவடி நகர கழக தலைவர்) இ. தமிழ்மணி (ஆவடி நகர கழகச் செயலாளர்) சி. வஜ்ரவேல் (ஆவடி நகர கழக துணைத் தலைவர்) அ அருண் (திருநின்றவூர் பகுதி கழக தலைவர்) கீதா ராமதுரை (திருநின்றவூர் பகுதி கழகச் செயலாளர்) சிலம்பரசன் (திருநின்றவூர் பகுதி கழக இளைஞரணி அமைப்பாளர்) மற்றும் திருநின்றவூர் பகுதி தோழர்கள் தமிழ்ச்செல்வன், ராணி ரகுபதி, சித்ரா,

பட்டாபிராம் பகுதி கழக தலைவர் வேல்முருகன், திருமுல்லைவாயல் பகுதி கழக தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ், திருமுல்லைவாயல் பகுதி கழகச் செயலாளர் ரவீந்திரன், அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ. ராமலிங்கம் அம்பத்தூர் பகுதி கழகச் செயலாளர் அய். சரவணன் மதுரவாயல் பகுதி கழக தலைவர் சு.வேல்சாமி, மதுரவாயல் பகுதி கழகச் செயலாளர் தமிழன் காசி, பூவிருந்தவல்லி பகுதி கழக தலைவர் பெரியார் மாணாக்கன், பூவிருந்தவல்லி பகுதி கழகச் செயலாளர் மணிமாறன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் தொண்டறம் மாணவர் அணி தோழர்கள் அன்புமணி, அறிவுமதி, செந்தமிழ் செல்வன்,

ஆவடி நகர கழகத் தோழர்கள் புருஷோத்தமன், மனோகரன், நடராஜன் H.V.F. த.அண்ணாதுரை, அயப்பாக்கம் அரி கிருஷ்ணன், பட்டாபிராம் பகுதி புரட்சி பாரதம் கட்சி தலைவர் சுதாகர், பட்டாபிராம் நகர காங்கிரஸ் தலைவர் அமீத் பாபு, பட்டாபிராம் 1ஆவது வார்டு காங்கிரஸ் தலைவர் எலியாஸ், பாசறை கோபால் பகலவன், கு சங்கர்,

பெரியார் பெருந்தொண்டர்கள் அம்பத்தூர் அ.வெ.நடராசன்,துரை முத்துகிருஷ்ணன் சேத்பட் நாகராசன் வை. கலையரசன், எழிலன், முகப்பேர் முரளி, திராவிட மணி,சதீஷ் கவிதா, வழக்குரைஞர் பன்னீர்செல்வம், புஷ்பா பன்னீர்செல்வம், த.லலிதா, எல்லம்மாள், ஆவடி மாவட்ட கழக மேனாள் செயலாளர் சிவகுமார், பூவிருந்தவல்லி பகுத்தறிவு, சந்திரபாபு, விஜயகுமார், கனிமொழி, திருவேற்காடு பகுதி இளைஞரணி தோழர்கள் பசுபதி, சின்னதுரை,வெற்றி, அஸ்வின், தினகரன், சிறீநிவாஸ், நிஷாந்த் துரை,வெள்ளவேடு கார்த்திக்,திருமழிசை கார்த்தி பெரியார் பிஞ்சுகள் இனியன், நன்னன், அருள்விழியன், ஜெப்ரி, பிராங்கிளின், சாமுவேல் ஆகியோர் இரண்டு நாட்கள் நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழகத் தலைவர் வெ. கார்வேந்தன் மற்றும் மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் ஆகியோர் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *