திருச்சி மாநகரத்திற்கு எப்போதும் பெருமையும் வரலாற்று முக்கியத்துவமும் உண்டு. இந்த மாநகரத்தில் தான் பட்டுக்கோட்டை தளபதி அஞ்சா நெஞ்சன் மாவீரன் அழகிரி அவர்கள் 1938 இல் தமிழர் பெரும்படை அமைத்து கட்டாய இந்தி ஒழிப்பு போராட்டத்தை வழி நடத்தினார். இந்தப் போராட்டத்தில் தன்னுடைய சிறுவயதில் பங்கேற்ற அனுபவத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் கூட்டத்தில் நினைவுகூர்ந்து பேசினார். பேரறிஞர் அண்ணா அவர்கள் திமுக பெரும் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பு சென்னை ஜார்ஜ் கோட்டைக்கு செல்லாமல் அப்போது திருச்சியில் இருந்த தந்தை பெரியார் அவர்களை சந்திக்க விரைந்தார் என்ற தகவலையும் கூட்டத்தில் பகிர்ந்தார். திமுக வின் முக்கிய பிரமுகர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் திராவிட இயக்கம் நூறு ஆண்டுகளுக்கு மேல் இருந்து வரும் மிகப்பெரிய வலுவான பாறை போன்ற இயக்கம்.
எதிரிகள் மோதி உடைக்க நினைப்பது பாறையை என்று பல கருத்துக்களை கூறி தன்னுடைய உரையை நிறைவு செய்தார் ஆசிரியர். இதை மேலும் தெளிவாக காண Periyar Vision OTT ஐ கட்டாயம் பாருங்கள்..
– ஐ. ஜானகிராமன்,
தேவகோட்டை.
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com