துப்பாக்கி முனையில் தமிழ்நாடு காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்

காரைக்கால், செப்.29- எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் கைது செய்தது.

தமிழ்நாடு மீனவர்கள்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 25ஆம் தேதி காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் மற்றும் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கோபி, துளசிநாதன் உள்ளிட்ட 12 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கோடியகரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் அவர்கள் விசைப்படகில் தங்கியிருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

12 பேர் கைது

நேற்று அதிகாலை 3 மணியளவில் அங்கு ரோந்துப் படகில் வந்த இலங்கை கடற்படையினர் முல்லைத்தீவு கடல்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி காரைக்கால் மீனவர்கள் 12 பேரையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

மேலும் அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கையின் காங்கேசன்  கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். இன்று (29.09.2025 ) திருகோணமலை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப் பட உள்ளனர்.

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுக்கவும் ஒன்றிய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மதியம் 12 மணிக்கு வருவதாக கூறி இரவு 7:40 மணிக்கு வந்தார் விஜய்

நெரிசலுக்கான காரணம் குறித்து காவல்துறை  விளக்கம்

கரூர், செப்.29- கூட்டத்திற்கு நடிகர் விஜய் தாமதமாகவந்தார் என்றும், 40பேர் உயிர் பலிக்கு காரணம் என்ன என்பது குறித்தும் தலைமை இயக்குநர்   (பொறுப்பு) வெங்கடராமன் விளக்கம் அளித்தார்.

2 ஆயிரம் காவலர்கள்

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) வெங்கடராமன் கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

கரூருக்கு 10 ஆயிரம் பேர்தான் வருவதாக சொன்னார்கள் ஆனால், 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அதிகமான கூட்டம் வருவார்கள் என்பதை எதிர்பார்த்து தான் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி தெரிந்த உடனேயே  காவல்துறை கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கரூர் விரைந்து சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு 2 காவல்துறை தலைவர்கள் உள்ளிட்ட  2 காவல்துறை துணைத்தலைவர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் காவல்துறையினர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரிய அரசியல் கட்சியின் கூட்டம் கூட அங்கு தான் (வேலுச்சாமிபுரம்) நடந்தது. அதனால்தான் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது.

த.வெ.க.வினர் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால்,
த.வெ.க.வின் சமூக வலைத்தள பக்கத்தில் மதியம் 12 மணிக்கே விஜய் வந்து விடுவார் என்று அறிவிக்கப்
பட்டது.

இரவு 7.40 மணிக்கு வந்தார்

இதனால் 11 மணி முதலே மக்கள் வரத் தொடங்கினர். ஆனால், அவர் வந்தது இரவு 7.40 மணிக்கு. இதனால் காலை 11மணி முதல் கூடிய கூட்டம் அங்கேயே நின்று கொண்டு இருந்தது. அவர்களுக்கு போதுமான தண்ணீர் மற்றும் உணவு வசதி இல்லை.

கூட்டத்துக்கு நிபந்தனை விதிக்கும் போதே தொண்டர்களை சீராக அழைத்து வந்து சீராக அமர வைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *