நாகர்கோவிலில் தொழிற்பயிற்சிக் கல்லூரியில் பெரியார் பிறந்தநாள் மரக்கன்று நடும் விழா மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம், தலைமையில் மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், முன்னிலையில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட துணைச்செயலாளர்கள் எஸ்.அலெக்சாண்டர், அய்சக் நியூட்டன் மகளிரணி தலைவர் இந்திராமணி, இளைஞரணி மாவட்டத் தலைவர் இரா.இராஜேஷ், கழகத் தோழர்கள் மு.பால்மணி, பெரியார்தாஸ், கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்கள் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டனர்.