புதுக்கோட்டை, செப். 29- புதுக்கோட்டை விடுதியைச் சேர்ந்த சுயமரியாதைச் சுடரொளி பெ.இராவணனின் மூத்த மகள் மீனாவின் இணையர் சென்னையில் வசித்து வந்த தொழிலதிபர் திருப்பதி 24.9.2025 அன்று மறைவுற்றார்
இறுதி நிகழ்வில் திராவிடர் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்.
அவருடன் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, அறந்தாங்கி மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாவட்டப் பொருளாளர் நெய்வத்தளி க.வீரையா, வீரவிளையாட்டுக் கழக அமைப்பாளர் கறம்பக்குடி முத்து, குப்பகுடி இரா.இளங்கோ, புதுக்கோட்டை மாநகரச் செயலாளர் .அ.தர்மசேகர், ம.மு.கண்ணன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.