சென்னை, செப்.29 கரூரில் வேலு சாமிபுரம் பகுதியில் 27.9.2025 அன்று தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரி சலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் ராஜகுமாரி நேற்று (28.9.2025) இரவு பார்வையிட்டார்.
இதன் பின் செய்தியாளர் களிடம் பேசிய அவர், கரூர், வேலுசாமிபுரத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந் தவர்களின் உடல்கள் முழு வதுமாக உடற்கூராய்வு செய்யப் பட்டு, குடும்பத்தினரிடம் ஒப் படைக்கப்பட்டுவிட்டது.
கரூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் இருவரின் உடல்நிலை மட்டுமே கவலைக்கிடமாக உள்ளது. மற்ற அனைத்து நோயாளிகளும் உடல் நலம் தேறி வருகின்றனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 31 பேர், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, கரூர் அரசு மருத்துவமனையில் உள்ள 60 முதல் 70 மருத்துவர்கள் குழுவுடன், சேலம், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்துள்ள சிறப்பு மருத்துவ நிபுணர்களும் இணைந்து பணியாற்றி வருகின் றனர்.
16 மருத்துவர்களைக் கொண்ட தனிக்குழு நியமிக்கப்பட்டு உடற் கூராய்வுப் பணிகள் நடைபெற்றன.
இறப்பிற்கான காரணம் குறித்த உடற்கூராய்வு அறிக்கைகள் தற்போது கிடைத்துள்ளன. இந்த அறிக்கைகளின்படி, பெரும் பாலான உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் மூச்சுத்திணறல் எனத் தெளிவாக உறுதி செய்யப்பட் டுள்ளது” என்று தெரிவித்தார்.