திருப்பத்தூர், செப். 29- திருப்பத்தூரில் தந்தைபெரியார் 147ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா முன்னிட்டு கட்டுரைப் போட்டி-ஓவியப் போட்டி 13.09.2025 அன்று பள்ளி மாணவர்களிடையே நடைப்பெற்றது.
இதில் பங்கேற்றவர்களுக்கும், வெற்றிப் பெற்றவர்களுக்கும் பரிசளிப்பு விழா 27.09.2025 அன்று மாலை 4.30 மணி மாவட்ட கழக அலுவலகம் அமைந்துள்ள டபேதார் முத்துசாமி தெருவில் நடை பெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் தலைமை வகித்தார். கோ.திருப்பதி (செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்), சு.குமரவேல் (அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் பெ.கலைவா ணன் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இப்போட்டித் தேர்வில் கட்டுரைப் போட்டியில் மொத்தம் 45 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 36பேர் பெண்கள் என்பது குறிப்பிடதக்கது.
தந்தை பெரியார் அவர்கள் எந்த நோக்கத்திற்காக இயக்கம் கண்டாரோ அந்த நோக்கம் மிகச்சரியாக இன்றைய பெண் மாணவர்களிடையே சென்றடைந் துள்ளது என்பதை உணர முடிந்தது. அதேபோன்று பெரியார் ஓவியப்போட்டி இதில் பங்கேற்ற 47 மாணவர்களும் பல வடிவங்களில் பெரியார் படத்தை வரைந்திருந்தார்கள்.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர் களாக வருகை புரிந்த B.Rtn.கணேஷ்மல் (காமராஜர் நூற்றாண்டு கல்வி அறக்கட் டளை தலைவர்), அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), எ.அகிலா (மாநில பொருளாளர் கழக மகளிரணி), எ.ஞானம் தலைவர் (விடுதலை வாசகர் வட்டம்), வ.புரட்சி (விடுதலை வாசகர் வட்டம்), எம்.என்.அன்பழகன் (அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம்) ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கும் பரிசு தொகையினை நன் கொடையாக வழங்கியவர்கள்
டபேதார் முத்துசாமி தெருவை சார்ந்தவர்கள் சி.கோவிந்தராஜ் (மேனாள் நகர பொருளாளர் 7ஆவது வார்டு செயலாளர்), Rtn கே.எம்.டி.சுபாஷ், கே.சதிஷ், ம.செல்வம், சி.சங்கர் (இருசக்கர வாகன செயலாளர்), ச.குமரவேல் (ஸ்டார் ஆயில் உரிமையாளர்), நா.அமரஜோதி (7 வார்டு பிரதிநிதி தி.மு.க), கா.சீனிவாசன் (ஆய்வக உதவியாளர்), எஸ். சிவக்குமார், இரா.குமரன், என்.விஜயகுமார் (பைனான்சியர்) ஆகியோர்.
கட்டுரைப்போட்டியில் முதல் பரிசினை ரூ. 2,000 க. இனியவன் (மாவட்ட மாணவர் கழகம்)
இரண்டாம் பரிசு ரூ. 1500 இரா. ஜனனி 12ஆம் வகுப்பு, மூன்றாம் பரிசு ரூ.1000 ஜெயசிறீ 11 ஆம் வகுப்பு, நான்காம் பரிசு ரூ. 500, வி.ஜனனி 12ஆம்வகுப்பு, மற்றும் ஆறுதல் பரிசாக ஒவ்வொருக்கும் ரூ.300 என்று பத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
அதே போன்று ஓவியப்போட்டியில் பங்கேற்று முதல்பரிசு ரூ. 2000 வி. திருமலை, இரண்டாம் பரிசு ரூ. 1500, மூன்றாம் பரிசு, ரூ. 1000 கோ. பேரறிவு யாழினி, ஆறுதல் பரிசு ரூ. 200 நான்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதல்களும், நோட்டுபுத்தகம், பேனா பரிசாக வழங்கப்பட்டது.
கட்டுரைப் போட்டியில் பங் கேற்ற மாணவர்கள் முழுமையாக தந்தை பெரியாரை உள்வாங்கி தனது சிந்தனையில் அதை மிக ஆழமாக வெளிப்படுத்தியிருந்தார்கள்.
குறிப்பாக பெண் மாணவர்கள் எழுதிய கட்டுரையில் பெண்ணுரிமை, பெண்கல்வி, ஆண், பெண் சமத்துவம், விதவை மறுமணம், சுயமரியாதைத் திருமணம், பெண்கள் சொத்துரிமை என்று பெரியாரின் கருத்துகளை வெளிப் படுத்தி, அவரை பின்பற்றி வாழ்வதில் பெருமை கொள்ளுகிறோம் என்று தனது எண்ணங்களையும் வெளிப்படுத்தி எழுதியிருந்தார்கள்.
கட்டுரைப் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள், அவர்கள் எழுதிய கட்டுரையை அவர்களே மாணவர் களிடையே மிகச் சிறப்பாக வாசித்து காட்டினார்கள்.
ஓவியப் போட்டியில் பங்கேற்றவர்கள் தந்தை பெரியாரை பல வண்ணங்களில் வண்ண ஓவியங்களாக மிகப் சிறப்பாக வரைந்து தனது திறமைகளை வெளிப் படுத்தியிருந்தார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செம்டம்பர் மாதம் முழுவதும் பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதிநாள் விழாக்களாக கொண்டாட வேண்டும் அழைப்பு விடுத்திருந்தார்.
அவர் அழைப்பை ஏற்று நடத்தப்பட்ட போட்டித் தேர்வு மாணவர்களிடையே மிகுந்த ஆர்வமும், வரவேற்பும் இருந்ததை உணரமுடிந்தது. இதை செய்து முடித்தில் மிகப் பெரிய மன நிறைவை தந்தது.
எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பெரியாருக்காக நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் ஆக்கபூர்வமான செயலே என்று பெருமையடைந்தோம்.
இது போன்ற போட்டித் தேர்வுகளில் ஒவ்வாரு வீதியிலும் மாரியம்மன் திருவிழா, விநாயகருக்கு விழா என்று எதற்காக கொண்டாடுகிறோம் என்று தெரியாமல் வெறும் கேளிக்கைக்காக மட்டும் கொண்டாடும் விழாக்களுக்கு மத்தியில் கழக தோழர்கள் மாணவர் களிடையே இது போன்று நிகழ்வுகளை நடத்தினால் அவர்களை நம்மால் சீர்படுத்தி பகுத்தறிவுப் பாதைக்கு திருப்ப முடியும் என்பதை திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நகரின் வீதியில் நடத்தப்பட்ட தந்தைபெரியார் கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி உணர்த்தியது.
இனி ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று இத்துடன் பேச்சுப் போட்டியை சேர்த்து நடத்த வேண்டும் என்ற எண் ணத்தை வலுப்படுத்தியுள்ளது. தந்தை பெரியார் வாழ்க என்று சொல்லுவதோடு மட்டும் நின்று விடாமல் அவர் சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து கொண்டே இருப்போம். முழுமையான சமத்துவத்தைப் படைப்போம்.
பங்கேற்ற கழகத் தோழர்கள்
சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத்தலைவர்), சி.எ.சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), ஏ.டி.ஜி.சித்தார்த்தன் (மாவட்ட துணைச் செயலாளர்), மா.சி.பாலன் (மாவட்ட காப்பாளர்), எம்.ஞானப்பிரகாசம் (மாவட்ட விடுதலை வாசகர் வட்டத்தலைவர்), வ. பரட்சி (மாவட்ட விடுதலை வாசகர் வட்ட துணைச்செயலாளர்), எம்.என்.அன்பழகன் (மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர்), இரா.கற்பகவள்ளி (மாவட்டத்தலைவர் மகளிரணி), விஜயா அன்பழகன் (மாவட்ட மகளிரணி காப்பாளர்), தாமரை (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்), நா.சுப்புலட்சுமி, சி.சபரிதா (மாவட்ட மகளீர் பாசறை செயலாளர்), வெ.அன்பு (மாவட்டத்தலைவர் ப. க), வி.அன்புச்சேரன் (நகரத்தலைவர் வாணியம்பாடி), பெ. ரா. கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்), இரா.நாகராசன் (கந்திலி ஒன்றியச் செயலாளர்), இராஜேந்திரன் (சோலையார்பேட்டை அமைப்பாளர்), கோ. திருப்பதி (மாவட்டச்செயலாளர் ப.க.), கே.மோகன் (மாவட்ட பெரியார் கட்டுமான தொழி லாளரணி செயலாளர்), அக்ரிஅரவிந்த் (நகர செயலாளர் இளைஞரணி), மோ. நித்தியானந்தம் (மாவட்ட துணைத் தலைவர் இளைஞரணி), சு.குமரவேல் (மாவட்ட துணைச் செயலாளர் ப. க.), கா.நிரஞ்சன் (மாவட்ட அமைப்பாளர் இளைஞரணி), மோ.வசீகரன் (மாவட்ட அமைப்பாளர் மாணவர் கழகம்), மு.வெற்றி மாதனூர் (ஒன்றியத் தலைவர்)வெங்கடேசன் (மாவட்ட ஒன்றியச் செயலாளர்).