டைபாய்டு காய்ச்சலால் ஏற்படும் விளைவுகளும், கோளாறுகளும்

பேராசிரியர்

டாக்டர் ந.ஜூனியர் சுந்தரேஷ்

 

டைபாய்டு காய்ச்சல், முக்கியமாக ‘சால் மோனெல்லா டைஃபி என்னும் நோய்க்கிருமியினால் ஏற்பட்டாலும் மற்ற சால்மோனெல்லா கிருமியினாலும் ஏற்படலாம். வெப்ப நாடுகளில் மிக அதிகமாகக் காணப்படும் நோய்களில் இதுவும் ஒன்று. இந்நோய், நீர் மூலம்  பரவுகிறது. சுற்றுப்புறச் சுகாதாரம் மிகக்குறைவாக உள்ள மற்றும் சமூகப் பொருளாதாரம் பின்தங்கிய பகுதிகளிலும் இந்நோய் மிகுதியாகக் காணப்படும். இந்தியாவிலும், இலங்கையிலும் ஒரு லட்சத்தில் 100-200 என்ற அளவில் காணப்படுகிறது. இதில் 50 விழுக்காடு குழந்தைகளைப் பாதிக்கிறது. வட இந்தியாவில் மே, அக்டோபர் மாதங்களிலும், தென் இந்தியாவில் ஜூலை-டிசம்பர் மாதங்களிலும் அதிக விழுக்காட்டில் காணப்படுகிறது. நோய்த் தாக்குதல் ஆண்டுக்காண்டு 5 விழுக்காடு உயர்கிறது.

நோய்க் குறியியல்

இந்நோய், மிகுதியாக ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள், நோய் எதிர்ப்பாற்றல், சுகாதாரம் குறைந்த இடங்களில் வசிக்கும் குழந்தை களைப் பெரிதும் பாதிக்கிறது. பெரும்பாலும் ஈ மூலமாக தொற்று ஏற்பட்டு, உட்கொள்ளும் நீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலமாக நோய்க்கிருமி குடலை அடைகிறது.  காய்ச்சாத பால், ஐஸ்கிரீம், கழிவுநீரில் பயிரிடப்படும் காய்கறி மூலமும் இத்தொற்று ஏற்படுகிறது. முன்சிறுகுடலில் அவை பித்தநீரில் நன்றாக வளர்ந்து, பின் அங்கிருந்து இரத்தத்தில் கலந்து மறுபடியும் பித்தநீர் வழியாகச் சிறுகுடலை. அடைகிறது. அங்கிருந்து கடைச்சிறுகுடலில் நிணநீர் திசுக்களில் தொற்றுகிறது. அங்குதான் புண் ஏற்படுகிறது.

 நோயினால் ஏற்படும் விளைவுகளும் கோளாறுகளும்

  1. நச்சுத்தன்மை இரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவி கல்லீரல் அழிவு ஏற்படும். பித்தப்பை அழற்சி தோன்றி ஓட்டை விழும் சிலர் டைபாய்டு கிருமியு டனே வாழ்வார்கள்.
  2. குடலில் தொற்று ஏற்பட்டபின், அவ்விடம் சிவந்து, கன்றிப் போய் காணப்படும். அது, நாளடைவில் டைபாய்டு கிருமிகளாகக் காணப்படும். இதனால் அவ்விடத்தில் நச்சு உண்டாகி இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு திசுக்கள் சேதம் அடையும். இவ்விளைவினால் குடல் புண்ணும், சில சமயங்களில் குடல் ஓட்டையும் ஏற்படும்.

அறிகுறிகள்

காய்ச்சல் பொதுவான அறிகுறியாகும். அறுவை மருத்துவத்தைப் பொறுத்தவரை குடலில் ஏற்படும் ஓட்டை மற்றும் அதன் விளைவுகள் பெரும்பாலும், நோய் ஏற்பட்ட மூன்றாவது வாரத்தில் தோன்றும்

டைபாய்டு நோயாளிகள் இக்காலக் கெடுவிற்குப் பிறகு திடீரென்று தாங்கமுடியாத வலிக்குள்ளாவார்கள். ஆனால் வயிறு உப்பியும். தொடும்போது வயிறு விறைத்தும் காணப்படும். பொதுவாக, காய்ச்சல் இருக்கும் நோயாளிக்கு அதிகரிக்கும். டைபாய்டு நோயாளிகளுக்கு நாடித்துடிப்பு குறைவாகக் காணப்படும். நோயாளிக்கு எக்ஸ்ரே படம் வயிற்றுப் பகுதியை எடுத்துப் பார்ப்பது அவசியம். இரண்டு வாரங்களுக்கு மேல் வைடால் பரிசோதனை மூலம் நோயை நிச்சயிக்கலாம். குளோரோம்ஃபினிகால் காய்ச்சல் ஆரம்பித்த பின் கொடுத்திருந்தால், இரத்தப் பரிசோதனையில் கண்டுபிடிப்பது கடினம். இந்நோயின் பக்கவிளைவாக சிறுகுடலில் ஓட்டை, இரத்த ஒழுக்கு ஏற்படலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *