சென்னை, செப்.28 ‘ஹலோ எப்.எம்.மில்’ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணிக்கு ஸ்பாட்லைட் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிவருகிறது. இன்று காலை நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்று பேசி யுள்ளார்.
‘பலவீனமானவர்கள்தான் தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதாகவும், வேறு எதற்கும் அடிபணியாமல், தன்னுடைய கட்சி கொடுத்த தலைவர் பதவிக்கு உரிய பணிகளை செய்து வருவதாகவும், நாகரிகம் கருதி தனிமனித தாக்குதல்களில் ஈடுபட விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், பாசிச கட்சிகள் எந்த விதத்திலும் வலுபெற்றுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பதால், தி.மு.க.வுக்கு உண்மையான தோழனாக இருக்கிறோம் என்றும், மக்களின் பிரச்சினைகளுக்காக முதலில் களத்தில் நிற்பது காங்கிரஸ் கட்சிதான் என்றும் பேசியுள்ளார்.
தேர்தலில் போட்டியிட அதிக இடங்கள் வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று மேனாள் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் கேட்பது தொடர்பாக வைக்கப்பட்ட கேள்விக்கு, ‘கட்சி விவகாரங்களை எங்கு கேட்கவேண்டுமோ? அங்கு கேட்கவேண்டும். மாறாக பொது வெளியில் சென்று கேட்கக்கூடாது. 2021 சட்டமன்ற தேர்தலின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த அழகிரி, ஏன் 25 இடங்களுக்கு ஒத்துக்கொண்டார். அதிக இடங்களை கேட்க அவரைத் தடுத்தது எது?’ என்று பதில் அளித்திருக்கிறார்.
இப்படியாக தமிழ்நாட்டின் சமகால அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளரின் பல்வேறு கேள்விளுக்கு செல்வப்பெருந்தகை விளக்கமாக பதில் அளித்துளார்.
அமெரிக்காவின் பொருளாதார முடக்கம் குறித்து வாதம் நடத்த
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை
ஒன்றிய அரசு உடனடியாக கூட்ட வேண்டும்
ஒன்றிய அரசு உடனடியாக கூட்ட வேண்டும்
வைகோ வலியுறுத்தல்
சென்னை, செப். 28– ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் நாள்தோறும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். மருந்துகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் இறக்குமதி வரியால் இந்திய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. கடந்தாண்டு அமெரிக்காவுக்கு ரூ.31ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்துகளை இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளன.
இந்தாண்டின் முதல் பாதியில் மட்டும் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்துகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.மேலும், இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருப்பது இந்திய தொழில்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அமெரிக்க அரசின் பொருளாதாரப் போர் குறித்து விவாதித்து முடிவெடுக்க ஒன்றிய அரசு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். அமெரிக்காவின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.