சென்னை, மே 25- சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற் றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளிலும் பெரிய அளவில் முதலீடு செய்ய சிங்கப் பூர் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்த மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாகின.
சென்னையில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரில் நேற்று (24.5.2023) நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் கலந்துகொண்டார். 250-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
வரும் 2024 ஜனவரியில் பெரிய அள வில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த உள்ளோம். எங்கள்முக்கிய முதலீட்டாளர்களில் சிங்கப்பூரும் ஒன்று. தமிழ்நாட்டில் 30 சிங்கப்பூர் நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டை வரும் 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்குநிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். எனவே, சிங்கப்பூர் நிறுவ னங்கள் தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வரவேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளில்…
கடந்த 2 ஆண்டுகளில் 226 திட்டங் களுக்கான ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.95 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட் டுள்ளன. 4.12 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக் கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் ரூ.4,800 கோடி முதலீட்டில் 4 சிங்கப்பூர் நிறுவ னங்கள் தமிழ்நாட்டில் ஒப்பந்தம் செய்துள் ளன. இதன்மூலம் 6,200 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பின்டெக் நகரம் அமைப்பது போன்ற திட்டங்களை செயல் படுத்த, உங்களது ஆற்றலும், அனுபவமும் எங்களுக்கு மிகவும் தேவை. தொழில் பூங்காக்கள் மேம்பாடு, தொழில் நகரி யங்கள், தொழில் பெருவழித் தடங்கள், துறைமுகங்களை மேம்படுத்துதல், நகர்ப் புற உள்கட்டமைப்பு, கழிவுநீர், திடக்கழிவு மேலாண்மை, கடல்நீரை நன்னீராக்கும் திட்டம், சுற்றுலா தொடர்பான திட்டங் களில் சிங்கப்பூரின் ஒத்துழைப்பு தமிழ் நாட்டுக்கு அவசியம்.
சிப்காட் மற்றும் சிங்கப்பூர் இந்தியா கூட்டுத் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தரமான உள்கட்டமைப் புக்கான கொள்கைகள் மற்றும் அளவு கோல்களை உருவாக்குதல், சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை, மலிவு விலையில் இல் லங்கள், பசுமைக் கட்டடங்கள் போன்ற வற்றை மேம்படுத்தி, அதன்மூலம், தொழில் பூங்காக் களின் தரத்தை மேம் படுத்த முயற்சி மேற்கொள் ளப்படும். வந் தாரை வாழவைத்த சிங்கப்பூர் எங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தும் வளப்படுத்த வேண் டும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
ஆறு ஒப்பந்தங்கள்
மாநாட்டில் சிங்கப்பூர் போக்குவரத்து, வர்த்தக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் பேசும் போது, ‘‘தொழில் 4.0 நோக்கிய பயணத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கு ஆதரவு அளிக்க இரு அரசுகளும் இணைந்து செயல் படுகின்றன’’ என்றார்.
முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் கையெழுத்தாகின.
* ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, பல் கலைக்கழக ஒத்துழைப்பு போன்றவற்றுக் காக தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறு வனம் – சிங்கப்பூர் இந் திய தொழில், வர்த்தக கூட்டமைப்பு ஒப்பந்தம்.
* பொருளாதார நடவடிக்கை, வளர்ச் சியில் ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலு வலகம் (சிஅய்பிஓ) – சிப்காட் ஒப்பந்தம்.
* தொழிற்கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்க பொருளாதார செயல்பாடு களுக்காக சிஅய்பிஓ – தமிழக பேம்டிஎன் (FameTN) மற்றும் டான்சிம் ஒப்பந்தம்.
* ரூ.312 கோடி முதலீட்டுடன், 700 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மின்னணு பாகங்கள் தயாரிக்க தொழில் வழிகாட்டி நிறு வனம் – சிங்கப் பூரின் ஹை-பி இன்டர்நேஷனல் நிறுவனம் ஒப்பந்தம்.
* பாடத்திட்டம், பாட மேம்பாட் டுக்காக தொழில் வழிகாட்டி நிறுவனம் – சிங்கப்பூர் தொழில் நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக் கழகம் (எஸ்யு டிடி) புரிந்துணர்வு ஒப்பந்தம்.
* தொழில்நுட்பம், தொழிற்கல்வி பயிற்சித் துறையில் நீண்டகால கூட்டாண் மைக்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் – சிங்கப்பூரின் அய்டிஇ கல்வி சேவை நிறுவனம் ஒப்பந்தம் ஆகிய 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின.