மண்ணச்சநல்லூர், செப். 28– மண்ணச்ச நல்லூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் 9.9.2025 அன்று முற்பகல் 11 மணிக்கு மண்ணச் சநல்லூர் ஒன்றிய கழகத் தலைவர் கு.பொ.பெரியசாமி அலுவலத்தில் நடைபெற்றது.
விடுதலை சந்தா புதுப்பித்தல் மற்றும் புதிய சந்தா சேர்த்தல்,
செங்கல்பட்டு மறைமலைநகரில் வருகிற 4.10.2025 அன்று நடைபெறவுள்ள சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு,
மண்ணச்சநல்லூர் ஒன்றியம் – சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம் – நிதி வழங்குவது சம்பந்தமாக
எதிர்வரும் நவம்பர் 26இல் லால்குடியில் நடைபெறவுள்ள ஜாதி ஒழிப்பு மாநாட்டில் திரளாகக் கலந்து கொள் வதுடன் அதற்குத் தேவை யான நிதி உதவி அளித்தல்.
ஒன்றிய தலைவர் கு.பொ.பெரியசாமி தலைமை வகிக்க, மு.முத்து சாமி, க.ஆசைத்தம்பி முன் னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆ.அங்க முத்து, முருகேசன், கோ.பாலசுப்ரமணியம், க.சிவங்கரன், கே.பிச்சை, க.ஆசைத்தம்பி, பாவேந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.