சென்னை, செப். 28– தமிழ்நாட்டில் அரசுப் பணி தேடும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு வந்துள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC), பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள 1,588 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தப் பணியி டங்களுக்கு விண்ணப்பிப் பவர்கள் தேர்வு எதுவும் எழுதத் தேவையில்லை. மெரிட் லிஸ்ட் அடிப்படையில், நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் மட்டுமே தேர்ந்தெடுக் கப்படுவார்கள். ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள், 2025 செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 18 வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) மொத்தம் 1,588 அப்ரண்டிஸ் காலியிடங்கள் நிரப் பப்பட உள்ளன; இதில் கிராஜுவேட் அப்ரண்டிஸ் (பொறியியல்/தொழில்நுட்பம்) பிரிவில் 459 இடங்களுக்கு ரூ.9,000 மாதச் ஊதியமும், டெக்னீசியன் அப்ரண் டிஸ் (டிப்ளமோ) பிரிவில் 561 இடங்களுக்கு ரூ.8,000 மாத ஊதியமும், நான்-இன்ஜினியரிங் கிராஜுவேட் அப்ரண்டிஸ் பிரிவில் 569 இடங்களுக்கு ரூ.9,000 மாத ஊதியமும் வழங்கப்பட உள்ளன; இந்த அனைத்துப் பணி யிடங்களும் தமிழ்நாடு முழுவதும் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான கட்டணமும் கிடையாது. மேலும், விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அப்ரண்டிஸ் விதிகளின்படி நிர்ணயிக்க ப்படும்.
தேர்வு முறை:
விண்ணப்பித்தவ ர்களின் கல்வித் தகுதி யிலான மதிப்பெண்கள் அடிப்படையிலான மெரிட் லிஸ்ட் (Merit List) தயாரிக்கப்படும்.
அதன் பிறகு, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2025
தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ அறி விப்பை முழுமையாகப் படித்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பு மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து, இந்த அரிய வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள் ளலாம்.