அமைச்சர் நாசர் திட்டவட்டம்!!
சென்னை செப்.28– புதிய வக்ஃபு திருத்த சட்டப்படி, தமிழ்நாடு வக்ஃபு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; 1995 ஆம் ஆண்டு வக்ஃபு சட்டத்தினை ஒன்றிய அரசு திருத்தம் செய்து, ஒருங்கிணைந்த வக்ஃபு மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம்,1995-னை 08.04.2025 அன்று நடைமுறைப்படுத்தியது.
இச்சட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தொடர் எதிர்ப்புத் தெரிவித்து. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதே போல் பல்வேறு தரப்பினரும் இச்சட்டத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வாறு தொடுக்கப்பட்ட இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் 15.09.2025 அன்று இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது, மேற்கண்ட வக்ஃபு சட்ட திருத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை, ஒன்றிய அரசு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்திய புதிய வக்ஃபு திருத்தச் சட்டத்தின் படி, வக்ஃபு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள்
இபிஎப்ஓ (EPFO) புள்ளிவிவரத்தில் தகவல்
சென்னை, செப்.28– தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இபிஎப்ஓ (EPFO) வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்காக முதலீடுகளை ஈர்த்து வருவதோடு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு வேலைவாய்ப்பு சதவீதம் உயர்ந்துள்ளதாக தற்போது இபிஎப்ஓ புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஒரு ஆண்டிற்கு சராசரியாக 12.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10% தமிழ்நாட்டில் இருந்து வந்தது என அதன் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. மேலும் 4 வருடங்களில் மொத்தமாக 52 லட்சத்திற்கும் அதிகமானோர் இபிஎப்ஓ (EPFO)வில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குரூப்-4 தேர்வில் கூடுதலாக
727 காலிப் பணியிடங்கள் சேர்ப்பு
727 காலிப் பணியிடங்கள் சேர்ப்பு
சென்னை செப்.28– குரூப்-4 தேர்வில் கூடுதலாக 727 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்த பணியிடங்கள் எண் ணிக்கை 4,662 ஆக உயர்ந்தது.
இதுதொடர்பாக டிஎன்பி எஸ்சி செயலர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவி யாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காவலர் உள் ளிட்ட பல்வேறு பதவிகளில் 3,935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கி ணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி வெளியானது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த ஜூலை 12ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில், கூடு தலாக 727 காலிப் பணியிடங் களுக்கான பிற்சேர்க்கை, தேர்வாணையத்தின் இணையதளத் தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் அறிவிக்கப்பட்ட மொத்த காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 4,662 ஆக அதி கரித்துள்ளது. கூடுதல் காலி இடங்கள் பெறப்படும் பட்சத் தில், கலந்தாய்வுக்கு முன்பு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.