28.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கட்டுப்பாடில்லாத ரசிகர்களால் கரூரில் கடும் நெரிசல்: விஜய் பிரச்சாரத்தில் 39 பேர் பலி; 16 பெண்கள், 8 குழந்தைகளும் உயிரிழந்த சோகம். ஆறுதல் சொல்லாமல்.. கண்டுகொள்ளாமல் சென்னைக்கு போன விஜய்.
* தமிழ்நாட்டு விவசாயிகள், ஏற்றுமதியாளர்களாக மாறிட அரசு துணை நிற்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 39 பேர் பலி. முந்தைய பேரணிகளின் எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன; மோசமான கூட்ட மேலாண்மை மற்றும் கட்சியே 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று எதிர்பார்த்தது உள்ளிட்டவையே காரணங்கள் என அங்கிருந்தோர் புலம்பல்.
தி இந்து:
* தற்போதைய மோடி ஆட்சியில் நாடாளுமன்றத்தில் இருந்து ஒன்றும் ஆகப்போவதில்லை; ‘எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும், பாஜகவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தக் கூடாது என மூத்த அரசியல் பொருளாதார வல்லுநர் பரகலா பிரபாகர் பேச்சு.
தி டெலிகிராப்:
* “லடாக்கில் ஒன்றிய அரசு நிலைமையை மோசமாக கையாண்டதையும், அதைத் தொடர்ந்து கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதையும் இந்திய தேசிய காங்கிரஸ் கடுமையாகக் கண்டிக்கிறது” என்று காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, எக்ஸ் பதிவில் கண்டனம்.
– குடந்தை கருணா