மேட்டூர், செப்.28– மேட்டூர் கழக மாவட் டத்தில் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சங்ககிரி வட்டம், காவேரிப்பட்டி அக்கிர ஹார கிராமத்தில் மாவட் டக் கழகத் தலைவர் கா.நா.பாலு இல்லத்தில், மாவட்ட மகளிரணித் தலைவர் கை.அறிவுமணி பெயர்த்தி முதல் வகுப்பு பயிலும் பெரியார் பிஞ்சு செ.புகழினி – கழகக் கொடியினை ஏற்றி வைத்தார்.
எடப்பாடி சின்ன மணலி பெரியார் படிப் பகத்தில் மாவட்டக் கழகத் தலைவர் கா.நா.பாலு தலைமையில், பெரியார் பெருந்தொண்டர் ஆ.சத்தியநாதன் கழகக் கொடியினை எற்றி வைத்தார். நகரத் தலைவர் ஆ.சா.ரவி, தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.அன்புமதி இனிப்புகள் வழங்கினார். நகரச் செயலாளர் சி.மெய்ஞான அருள், மாணவ மாணவி களுக்கு பெரியார் பிஞ்சு புத்தகங்களை வழங்கினார். எடப்பாடி ஒன்றியத் தலைவர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் அனை வரையும் வரவேற்றார்.
ஆம்ஆத்மி-எடப்பாடி சட்டமன்றத் தொகுதி தலைவர் எம்.குமரேசன், மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.