காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக, பாமக, பாஜகவை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். சித்தாமூர், சாலவாக்கம் ஒன்றியங்களை சேர்ந்த பாஜகவின் பி.அமீர்பாஷா, எஸ்.பாஸ்கர், ஏ.சண்முகம், அதிமுகவை சேர்ந்த எம்.அன்பழகன், ஜி.சசிகுமார், மணிகண்டன், பாமகவில் இருந்து ஏ.நரேஷ், வி.நாராயணன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் அடுத்தடுத்து தி.மு.க.வில் அய்க்கியமாகியுள்ளனர்.
பா.ஜ.க.விற்கு புது பெயர் வைத்து
விமர்சித்த ராகுல்
விமர்சித்த ராகுல்
பாஜகவின் இன்னொரு பெயர் ‘பேப்பர் திருட்டு’ என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் போட்டி தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து, இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருவதாகவும், ஆனால் இதில் எல்லாம் அக்கறை காட்டாத பாஜக, அதிகாரத்தில் நீடிக்கவே அக்கறை காட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், வேலையின்மை என்பது வாக்கு திருட்டுடன் நேரடியாக சம்பந்தபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பங்கு மார்க்கெட்டில்
பங்குகள் விலை கடும் சரிவு
பங்குகள் விலை கடும் சரிவு
இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர் களுக்கு இந்த வாரம் சோதனை காலமாக அமைந்துள்ளது. 25.9.2025 அன்று தொடர்ந்து 6-ஆவது நாளாக சென்செக்ஸ் 733 புள்ளிகள் சரிந்து 80,426 புள்ளிகளுடனும், நிஃப்டி 236 புள்ளிகள் சரிந்து 24,654 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அய்டி துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவை கண்டுள்ளதால், முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடியை இழந்துள்ளனர்.