வியாசர்பாடி, செப். 27- சென்னை மாவட்ட திராவிட தொழிலாளர் கழகத்தின் மேனாள் செயலாளரும், ‘பாசறை முரசு’ இதழின் ஆசிரியர் மு.பாலனின் சகோதரருமான மு.நெடுஞ்செழியன் (வயது 83) நேற்று (26.9.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு கோ.செல்வம், கோ.சாக்ரடீஸ் ஆகிய மகன்கள் உள்ளனர்.
கொடுங்கையூர் – திருவள்ளுவர் நகரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு இன்று (27.9.2025) காலை கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
வடசென்னை மாவட்ட கழகக் காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி, துணைச் செயலாளர் வ.தமிழ்ச்செல்வன், இளைஞரணி செயலாளர் ந.கார்த்திக், மகளிர் பாசறைத் தலைவர் த.மரகதமணி, கொடுங்கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் தலைவர் ப.கோபாலகிருட்டிணன், கொளத்தூர் அமைப்பாளர் ச.இராசேந்திரன், எருக்கமாநகர் அமைப்பாளர் சொ.அன்பு, கண்ணதாசன் நகர் அமைப்பாளர் க.துரை, மாதவரம் அமைப்பாளர் சி.வாசு, திராவிட மாணவர் கழக செயலாளர் அ.புகழேந்தி, க.செல்லப்பன், கவின் கிசோர் மற்றும் தோழர்களும் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.
இன்று முற்பகல் 11 மணியளவில் இறுதி ஊர்வலம் புறப்பட்டு, முல்லை நகர் இடுகாட்டில் எவ்வித மூடச் சடங்குகளுமின்றி இறுதி நிகழ்வு நடைபெற்றது.