27.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாட்டைப் போன்று, பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் அறிவிப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு அளித்திட அரசு ஆணை பிறப்பித்தது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உத்தரகாண்டில் வினாத்தாள் கசிவு தொடர்பாக போராடும் மாணவர்களுக்கு ராகுல் ஆதரவு. பாஜகவை ‘வினாத்தாள் திருடர்கள் ‘ என விமர்சனம்.
தி இந்து:
* சமீபத்திய விகிதக் குறைப்புகளால் ஏற்படும் வருவாய் இழப்பை மாநிலங்களுக்கு ஈடு செய்வது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் விவாதிக்கவில்லை என்று கவுன்சிலின் உறுப்பினர்களான தெலங்கானா மற்றும் கேரள நிதி அமைச்சர்கள் புகார்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* லடாக் கலவரம், வாங்சுக் கைதுக்கு எதிர்ப்பு: லடாக்கில் சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதில் பாஜகவின் “மோசமான தோல்வியிலிருந்து” “கவனத்தையும் பொறுப்பையும் திசைதிருப்ப” மோடி அரசாங்கத்தின் நடவடிக்கை இந்த கைது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* கருநாடகாவில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு: பெங்களூரு விடுதியில் நடந்த ‘இந்தி ஊக்குவிப்பு’ கூட்டத்திற்கு எதிராக 41 கன்னட ஆதரவு ஆர்வலர் கள் போராட்டம். ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது ஹிந்தியை திணிக்கும் முயற்சி என்று குற்றச்சாட்டு.
* பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் மீது அவமதிப்பு வழக்கு: இந்தியாவின் வளர்ச்சிக்கு நீதித்துறை மிகப்பெரிய தடையாக இருப்பதாக கூறியதற்காக சஞ்சீவ் சன்யால் மீது அவமதிப்பு நடவடிக்கைகளை தொடங்க இரண்டு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் அட்வகேட் ஜெனரல் அனுமதி கோரியுள்ளனர்.
– குடந்தை கருணா