இந்தியாவில் பரவும் புதிய வைரஸ் அய்சிஎம்ஆர் எச்சரிக்கை
இந்தியாவில், குறிப்பாக டில்லி, மும்பை, கான்பூரில் H3N2 வைரஸ் காய்ச்சல் வேகமாத பரவி வருகிறது. டில்லி, என்சிஆர் பகுதியில் 11,000 வீடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில் 69% வீடுகளில் குறைந்தது ஒருவருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கரோனா போல் பரவாது என்றபோதிலும்’ எச்சரிக்கையாக இருக்க அய்சிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகள், ஆஸ்துமா, இதய நோய்’ உள்ளவர்களை எளிதில் தாக்கும் என்பதால் கவனமாக இருங்கள்.
விண்வெளியில் விளைவிக்கப்பட்ட முதல் காய்கறி
உருளைக்கிழங்கு தான் விண்வெளியில் விளைக்கப்பட்ட முதல் காய்கறி. விண்வெளியில் உணவுப் பொருட்களை விளைவிக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் நாசாவும் விஸ்கான்சின் பல்கலை.யும் இணைந்து செயல்பட்டன. இதற்காக 1995இல் கொலம்பிய விண்கலத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு விளைந்த உருளைக்கிழங்கை வீரர்கள் உண்ண வில்லை. ஆய்வு செய்வதற்காக அவை பூமிக்கு கொண்டுவரப்பட்டன.
கொசுக்களுக்கு பிடித்த
குருதி வகை எது தெரியுமா?
குருதி வகை எது தெரியுமா?
அனைவரையும் கொசு கடிக்கிறது என்றாலும், ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் குறிவைத்து கடிக்க அவர்களின் ரத்த வகை தான் காரணம் என்பது தெரியுமா? கொசு குறிவைத்து, கடிப்பதில் முதல் இடத்தில் ‘ஓ’ வகை குருதி வகையினரும், 2ஆவது இடத்தில் ‘பி’ வகையினரும் உள்ளனர். இவர்களின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையில் அதிகமாக காணப்படும் லாக்டிக் திரவம் கொசுக்களை ஈர்க்கும் மணத்தை கொண்டுள்ளதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஆண்களை விட பெண்களுக்கு ஆயுள் அதிகம்
ஆண்களை விட பெண்களுக்கு சராசரி ஆயுள் அதிகம் என்பது உலகறிந்த உண்மை. சராசரியாக பெண்கள் 75.6 ஆண்டுகளும், ஆண்கள் 70.8 ஆண்டுகளும் வாழ்கிறார்கள் என்று அண்மையில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.